Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை 2ஆம் கட்டப் பயனாளிகள் 50% நீக்கமா? என்பது குறித்து தமிழக அரசு முக்கிய விளக்கமளித்துள்ளது
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் நீக்கம் என பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது. முழு விவரம் இங்கே.
1/6
வதந்திக்கு முற்றுப்புள்ளி
1. வதந்திக்கு முற்றுப்புள்ளி : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் சுமார் 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
2/6
1.29 கோடி பேருக்கு உரிமைத்தொகை
2. 1.29 கோடி பேருக்கு உரிமைத்தொகை : முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் சேர்க்கப்பட்ட தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் 2026 மாதத்திற்கான உரிமைத்தொகை நவம்பர் 14-ஆம் தேதியன்று மொத்தம் 1,29,97,568 பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
3/6
50% நீக்கம் என்பது பொய்
3. 50% நீக்கம் என்பது பொய் : இரண்டாம் கட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 17 லட்சம் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. பயனாளிகளைப் பெருமளவில் நீக்குவதற்கென எந்தவொரு சிறப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
4/6
மாதாந்திர வழக்கமான சரிபார்ப்பு
4. மாதாந்திர வழக்கமான சரிபார்ப்பு : அரசாணைகளின்படி, பல்வேறு அரசுத் துறைகளின் தரவுத்தளங்களுடன் பயனாளிகளின் விவரங்கள் ஒப்பிடப்பட்டு ஒவ்வொரு மாதமும் வழக்கமான புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன. இந்தச் சரிபார்ப்பு முறை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே, முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
5/6
பட்டியல் புதுப்பிப்பு எப்போது?
5. பட்டியல் புதுப்பிப்பு எப்போது? : பயனாளிகளில் யாரேனும் இறந்திருந்தாலோ, திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெறத் தகுதியற்றவர்களாக மாறியிருந்தாலோ அல்லது தாங்களாகவே திட்டத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தாலோ மட்டுமே அவர்களின் விவரங்களின் அடிப்படையில் பட்டியல் ஒவ்வொரு மாதமும் உரிய முறையில் புதுப்பிக்கப்படுகிறது.
6/6
வதந்திகளை நம்ப வேண்டாம்
வதந்திகளை நம்ப வேண்டாம் : நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் இத்தகைய தவறான செய்திகள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தக்கூடியவை. எனவே, 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாகப் பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனச் சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் தெளிவுபடுத்தியுள்ளார்.