MS Dhoni Retires From IPL : கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. இருப்பினும் அவர், சென்னை டீமிற்கு வழிகாட்டியாக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MS Dhoni Retires From IPL : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வீரருமான எம்.எஸ்.தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். இதையடுத்து, அவர் டீமிற்கு ஆலோசகராக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1/5
ஓய்வை அறிவித்தார் எம்.எஸ்.தோனி
ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக் விளையாடி வந்த எம்.எஸ்.தோனி, தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ், இவருடைய தலைமையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மேலும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2 முறையும் கோப்பையை வென்றுள்ளது.
2/5
சென்னையை இரண்டாவது வீடாக கருதும் தோனி
சென்னையை, தனது இரண்டாவது வீடு என்று சொல்லும் அளவிற்கு ரசிகர் கூட்டத்தையும் அன்பையும் சம்பாதித்த எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே அணிக்கு இனி விளையாட மாட்டார் என்ற தகவல் தெரிந்ததில் இருந்து ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.
3/5
சேப்பாக்கத்தில் கடைசி மேட்ச் இல்லையா..?
பலர், ஐபிஎல் போட்டியை, குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை காண காரணமாக இருந்தவரும் எம்.எஸ்.தோனிதான். இவர், எப்போது ரிட்டயர்மெண்ட் குறித்து கேள்வி எழுந்தாலும் அதற்கு அவர் கொடுத்த ஒரே பதில் ”சேப்பாக்கத்தில்தான் என்னுடைய கடைசி மேட்ச் இருக்கும்” என்பதுதான்.
4/5
ரசிகர்கள் ஏமாற்றம்
சேப்பாக்கத்தில் விளையாடுவேன் என்று கூறி விட்டு, இப்போது ஓய்வை அறிவித்திருப்பதால், ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். ஆனால், இதில் இன்னொரு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/5
ஆலோசகராக தொடர்கிறார்
எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆலோசகராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ’தல’யின் தரிசனத்தை அவ்வப்போது ஐபிஎல் போட்டிகளில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.