வங்கக்கடலில் உருவான முரசு புயல் நவம்பர் 3-ம் தேதி ஆந்திராவில் கரையைக் கடக்க உள்ள நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1/5
தமிழகத்தை நெருங்கும் முரசு புயல்
வங்கக்கடலில் உருவான முரசு புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
2/5
நவம்பர் 3ல் கரையை கடக்கும்
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (நவம்பர் 1) காலை 11.30 மணிக்கு முரசு புயல் உருவானது. மேற்கு வடமேற்கு திசையில் நகரும் இந்த புயல், நவம்பர் 3 ஆம் தேதி காலை தெற்கு ஆந்திர கடலோர பகுதியில், குறிப்பாக நெல்லூர் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
3/5
திருவள்ளூருக்கு ஆரஞ்சு ஆலர்ட்
புயல் காரணமாக இன்று (நவம்பர் 1) திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4/5
இன்று 5 மாவட்டங்களில் கனமழை
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/5
நாளை 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
நவம்பர் 2 ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.