இசையமைப்பாளரும் பாடகருமான தேவா, சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதற்கடுத்த சில தினங்களிலேயே, அவரது சகோதரரின் மகன் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தேனிசை தென்றல் தேவா, சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவால் திரையுலகே வாடி வரும் இந்த சமயத்தில், அவருடைய சகோதரரின் மகனான கார்த்திக் சபேஷ் உயிரிழந்துள்ளார்.
1/5
இசையமைப்பாளர் தேவா மரணம்
இசையமைப்பாளர் தேவா, சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இழப்பு பலரால் தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தனித்துவமான இசை மூலம் பலர் மனதை பிடித்த தேவாவின் குடும்பத்தில் இன்னொரு சோகமும் நிகழ்ந்துள்ளது. அவரது சகோதரர் மகன் உயிரிழந்துள்ளார்.
2/5
தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ்
தேவாவிற்கு சபேஷ் என்கிற சகோதரர் இருந்தார்.இவர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்ததோடு தேவாவின் பல படங்களில் அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார். இவர், கடந்த ஆண்டு, இதே அக்டோபர் மாதத்தில் உடல் நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார். தற்போது அவருடைய மகன் உயிரிழந்துள்ளார்.
3/5
யார் இந்த கார்த்திக் சபேஷ்
கார்த்திக் சபேஷிற்கு தற்போது 37 வயது ஆகிறது. இவர், குளிர் 100 டிகிரி, உதயம் என்.ஹெச்.4, பட்டத்து யானை, பர்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
4/5
மனதில் நின்ற கதாப்பாத்திரங்கள்
கார்த்திக் சபேஷ் நடித்தது சில படங்களே என்றாலும், அவர் அனைவர் மனதிலும் நிற்கும் கதாப்பாத்திரங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் இவர் கேரக்டர் பலருக்கும் பிடித்திருந்தது.
5/5
மக்கள் இரங்கல்
ஓராண்டுக்குள் இப்படி, இசையமைப்பாளர் தேவா வீட்டில் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளது கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது குடும்பத்தினருக்கு ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.