Erode Nurse Murder: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி உத்ரா (26) நர்சிங் படித்துள்ளார். இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது தம்பதியினர் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்ல கவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்கும், உத்ரா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி முதல் செவிலியராக வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளார் .
காலையில் ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லும்போது மனைவியை மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு இரவு வேலை முடிந்து திரும்ப வரும்போது மனைவி உத்ராவையும் அழைத்து வருவார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மனைவியை வழக்கம் போல் ரஞ்சித்குமார் காலை அழைத்து மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவு மனைவியை கூப்பிட மருத்துவமனைக்கு வந்தபோது மனைவி சீக்கிரமாகவே சென்று விட்டதாக தனியார் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து அங்கிருந்து வீட்டுக்கு சென்ற ரஞ்சித் குமார் பார்த்த போது வீட்டில் மனைவி உத்ரா இல்லை . செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் எடுக்காத காரணத்தால் அதிர்ச்சி அடைந்தவர் பல்வேறு இடங்களில் மனைவியை தேடியுள்ளார் . ஆனால் மனைவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் கடந்த 15 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் ரஞ்சித் குமார் மனைவி உத்ராவை காணவில்லை என புகார் அளித்தார் .
இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் ஒரு காட்டில் இளம்பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு பெருந்துறை போலீசார் சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் உடல் அழுகி போய் இருந்தது. இதனை அடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்த சில தடயங்களை சேகரித்து தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது. கடந்த 14 ஆம் தேதி காணாமல் போன செவிலியர் உத்திரா என்பது தெரிய வந்தது. இதுகுறித்து உத்ராவின் கணவருக்கு குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற ரஞ்சித் குமார் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த கொலை வழக்கு குறித்து வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீசார் கொலையாளிகளை கண்டுபிடிக்க 5 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் செவிலியர் உத்ரா பணியாற்றும் மருத்துவமனை பகுதியில் இருந்து அவர் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதி வரையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் உடன் பணியாற்றும் நபர்களிடம் விசாரணை நடத்தியதில் அங்கு பணியாற்றி வந்த சரவணன் என்பவர் மீது காவல் துறைக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் உத்திரா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சரவணனின் அலைபேசி என்னும் ஒரு பேப்பரில் கிடைந்துள்ளது. இதனால் போலீசார் விசாரணை வளையத்திற்குள் வந்த சரவணனிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதில் உத்ரா பணி முடிந்து சீக்கிரமாக செல்லும் போது அவரை பின் தொடர்ந்த சரவணன் உத்ராவை தான் வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற உத்ராவை தேசிய நெடுஞ்சாலையில் அருகே செல்லும் சர்வீஸ் சாலை அருகே அழைத்து சென்றுகொண்டிந்த போது ஆட்கள் இல்லாத இடத்தில் திடீரென வண்டியை நிறுத்தி உத்ரா அணிந்துருந்த நகைகளை தருமாறு கேட்டதாகவும் இதற்கு உத்ரா மறுப்பு தெரிவித்ததால் துப்பட்டாவை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உத்ராவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தாலிக் கொடியை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்த சரவணன் போலீசார் தன்னை தேடி வரக்கூடாது என்பதற்காக கொலையை திசை திருப்ப உத்ராவின் உடலில் இருந்த துணிகளை அகற்றிவிட்டு அங்கேயே உடலை போட்டு விட்டு பெருந்துறைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதால் பலரிடமும் கேட்டு யாரும் தராதால் உத்ரா அணிந்து இருந்த நகையை கண்டு கேட்டதாகவும் அதற்க்கு தர மறுக்கவே நகைக்காக கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளான்.தொடர்ந்து நடத்திய விசாரணையில் சரவணன் மீது ஏற்க்கனவே திருட்டு வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சரவணனை கைது செய்து பெருந்துறை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.மேலும் அவனிடமிருந்து நான்கரை சவரன் நகைகளையும் மீட்டனர் நகைக்காக உடன் பணியாற்றும் செவிலியரை உடன் பணியாற்றும் செவிலியரே கொலை செய்து இருக்கூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.