நாக பஞ்சமி நன்னாளில் சிவபெருமான் மற்றும் நாக தேவதைகளின் அருளால் 3 ராசிக்காரர்களுக்குத் தொழிலில் வெற்றியும் பண வரவும் பெருகும் யோகம் உருவாகிறது.
1/6
ராசி பலன்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
2/6
மகரம்
மகர ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கதவுகள் திறக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளும், அதற்கேற்ற பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். மன அழுத்தம் குறைந்து உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாகத் திருமணம் தள்ளிப்போனவர்களுக்குத் தகுந்த வரன் அமைந்து சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
3/6
கன்னி
கன்னி ராசியினருக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி தேடி வரும். நீங்கள் பல நாட்களாக போட்டு வைத்திருந்த திட்டங்கள், குறிப்பாக புதிய தொழில் அல்லது புதிய வேலைக்கான முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பண வரவு வந்து சேருவதால் சேமிப்பு உயரும். தன்னம்பிக்கையுடன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.
4/6
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி மிகச் சிறந்த நற்பலன்களை அள்ளித் தரும் நாளாக அமையப் போகிறது. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய புராஜெக்ட்களை தொடங்குவதற்கு இது சரியான தருணம். பணப்புழக்கம் கணிசமாக உயர்ந்து, நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த கடன் மற்றும் நிதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
5/6
ராசி பலன்
இந்த மங்களகரமான நாளில் நாக தேவதைகள் மற்றும் சிவபெருமானின் அருளால், 12 ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்குத் தொழிலில் வளர்ச்சி, எதிர்பாராத பண வரவு மற்றும் வாழ்வில் பல்வேறு அதிர்ஷ்ட யோகங்கள் கைகூடி வரவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார்யார்?
6/6
ராசி பலன்
இந்து சாஸ்திரங்களில் நாக வழிபாட்டிற்குரிய புனிதமான நாளாக கருதப்படும் நாக பஞ்சமி, ஆகஸ்ட் 17 அன்று திங்கட்கிழமை வருகிறது. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாக விளங்குவதால், அன்றைய தினம் நாக பஞ்சமி அமைவது ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.