நவராத்திரி விழா தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் தள்ளுபடி விலையில் கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
சென்னையில் கொலு பொம்மைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கொலு பொம்மையை எங்கு வாங்கலாம்?, எவ்வளவு தள்ளுபடியில் பெறலாம்?, இந்த விற்பனை எவ்வளவு காலத்திற்கு இருக்கும்? என்பதை இங்கு காணலாம்.
1/5
தொடங்கியது நவராத்திரி
நவராத்திரி பண்டிகை தொடங்கிவிட்டது. கடந்த அக். 11ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் அக். 20ஆம் தேதி விஜயதசமி, ஆயுத பூஜையுடன் நிறைவடையும்.
2/5
கொலு பொம்மை வழிபாடு
நவராத்திரி தினங்களில் வீட்டில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். மாலை நேரத்தில் பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். கொலு பார்க்க செல்பவர்களுக்கு கொலு பொம்மைகளை பரிசளிப்பதும் உண்டு. எனவே இந்த காலகட்டத்தில் கொலு பொம்மைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.
3/5
தமிழ்நாடு அரசின் கொலு விற்பனை
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் சார்பில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கிய விற்பனை வரும் அக்டோபர் 31ஆம் தேதிவரை வரை நடைபெறும்.
4/5
10 சதவீதம் தள்ளுபடி
சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இங்கு 50 ரூபாய் முதல் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை கொலு பொம்மைகள் விற்பனையாகின்றன.
5/5
அண்ணா சாலை மற்றும் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
சென்னை அண்ணா சாலையில் மட்டுமின்றி ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலிலும் (மினி ஏசி ஹால்) கொலு பொம்மைகள் மற்றும் அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் இங்கு சென்று கொலு பொம்மைகளை தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.