• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஐப்பசி மாத பிறப்பு: இன்றைய நாள் யார் யாருக்கு சிறப்பாக இருக்கும்...?

ஐப்பசி மாத பிறப்பு: இன்றைய நாள் யார் யாருக்கு சிறப்பாக இருக்கும்...?

Written BySudharsan G
Published: Oct 18, 2026, 05:51 AM IST|Updated: Oct 18, 2026, 06:03 AM IST
joinshare
October 18: ஐப்பசி மாதம் முதல் நாளான இன்று (அக்டோபர் 18), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

October 18, Today Horoscope: இன்று ஐப்பசி முதலாம் நாள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) பரபாவ வருடம்.

October 18 Rasipalan1/12

மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்

வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றம் காணப்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : ஒத்துழைப்பான நாள். பரணி : மாற்றம் காணப்படும். கிருத்திகை : ஏற்ற இறக்கமான நாள்.
October 18 Rasipalan2/12

மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும். திருவாதிரை : சாதகமான நாள். புனர்பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
October 18 Rasipalan3/12

கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

உடலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கமிஷன் பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம் புனர்பூசம் : பிரச்சனைகள் நீங்கும். பூசம் : எதிர்ப்புகள் விலகும். ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
October 18 Rasipalan4/12

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். இலக்கியப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் தெளிவுகள் பிறக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மகம் : தேடல்கள் உருவாகும். பூரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.
October 18 Rasipalan5/12

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தாய்வழி உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் உத்திரம் : வேறுபாடுகள் குறையும். அஸ்தம் : சாதகமான நாள். சித்திரை : அனுபவம் மேம்படும்.
October 18 Rasipalan6/12

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் உருவாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் சித்திரை : ஆர்வம் ஏற்படும். சுவாதி : வெற்றிகரமான நாள். விசாகம் : வரவுகள் மேம்படும்.
October 18 Rasipalan7/12

விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் மாற்றம் பிறக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் விசாகம் : ஆதாயம் மேம்படும். அனுஷம் : முன்னேற்றமான நாள். கேட்டை : மாற்றம் பிறக்கும்.
October 18 Rasipalan8/12

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து செல்லவும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மூலம் : அனுசரித்து செல்லவும். பூராடம் : தெளிவுகள் கிடைக்கும். உத்திராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
October 18 Rasipalan9/12

மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடி வரும். தந்தை வழியில் புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சிகள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திராடம் : நெருக்கடியான நாள். திருவோணம் : பயணங்கள் கைகூடும். அவிட்டம் : கவனம் வேண்டும்.
October 18 Rasipalan10/12

கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பூர்வீகச் சொத்துகள் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமைகள் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : ஒற்றுமை பிறக்கும். சதயம் : ஆர்வமின்மை குறையும். பூரட்டாதி : நுட்பங்களை அறிவீர்கள்.
October 18 Rasipalan11/12

மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

ஆன்மிக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறிய மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் பூரட்டாதி : தெளிவுகள் பிறக்கும். உத்திரட்டாதி : பயணங்கள் கைகூடும். ரேவதி : மேன்மையான நாள்.
October 18 Rasipalan12/12

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.