• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பழனி முருகன் கோயில் போறீங்களா? படிப்பாதை முழுவதும் அடைப்பு.. அதிரடி அறிவிப்பு

பழனி முருகன் கோயில் போறீங்களா? படிப்பாதை முழுவதும் அடைப்பு.. அதிரடி அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 23, 2026, 12:07 IST|Updated: Nov 23, 2026, 12:17 IST
joinshare
Palani Murugan Temple Karthigai Deepam: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோயில் தரிசனத்தில் சில மாற்றங்களை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. எனவே, இதற்கு ஏற்ப பயணிகள் தரிசனத்தை திட்டமிட வேண்டும்.

Palani Murugan Temple Karthigai Deepam: பழனி முருகன் கோயில் தரிசன முறைகள் மற்றும் நேரங்களில் கோயில் நிர்வாகம் மாற்றத்தை செய்துள்ளது. 
 

Palani Murugan Temple1/5

பழனி முருகன் கோயில்

முருகப்பெருமானின்  அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசித்து செல்வது வழக்கம். குறிப்பாக விசேஷ தினங்கள், விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதற்கிடையில் விசேஷ தினங்களில் அவ்வப்போது தரிசனத்தில் கோயில் நிர்வாகம் சில மாற்றங்களை செய்து வருகிறது. 
Palani Murugan Temple2/5

பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா

அந்த வகையில், நாளை கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் நிலையில், பழனி முருகன் கோயில் தரிசனத்தில் சில மாற்றங்களை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17ஆம் தேதி அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 24 ஆம் தேதியான நாளை பழனி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய விரும்பு பக்தர்களுக்கு சில முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.‌
Palani Murugan Temple3/5

பழனி முருகன் கோயில் தரிசனத்தில் மாற்றம்

நவம்பர் 24ஆம் தேதியான நாளை மாலை மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, நாளை மதியம் 2 மணி முதல் பக்தர்கள் படிப்பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மழைக் கோயிலுக்கு செல்லும் படிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
Palani Murugan Temple4/5

நாளை படிப்பாதை முழுவதுமாக அடைக்கப்படும் 

அதே நேரத்தில் பழனி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரோப் கார், வின்ச் சேவை வழியாக மலைக் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை படிப்பாதை மட்டுமே ஆறு மணி வரை அழைக்கப்படுவதை பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், கார்த்திகை தீபத் திருவிழாவான நாளை தங்கத்தேர் புறப்பாடும் இருக்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Palani Murugan Temple5/5

பக்தர்களுக்கு பிற கட்டுப்பாடுகள்

மேலும், மலைக்கோயில் பகுதியில் மொபைல் போன்ற கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் உள்ளன. இதன் காரணமாக படிகள், ரோப் கார் மற்றும் வின்ச் நிலையங்களுக்கு அருகில் உள்ள மையங்களில் செல்போனை பக்தர்கள் ஒப்படைத்துவிட்டு செல்லலாம் என கூறப்படுகிறது. எனவே, நாளை பழனி கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் முன்கூட்டியே இதனை அறிந்து அதற்கு ஏற்ப தரிசனம் செய்ய வேண்டும்.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

2

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

3

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

4

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

5

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.