Indian Railway Rules: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது என்றும் மீறனால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Indian Railway Rules: தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியன் ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
1/5
இந்தியன் ரயில்வே விதிமுறைகள்
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அதுவும் தற்போது நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதற்கிடையில், ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2/5
ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடை
அதாவது, ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பண்டிகை கால கூட்ட நெரிசலின்போது பாதுகாப்பான பயணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3/5
6 பொருட்களை ரயில்களில் எடுத்து செல்ல தடை
தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு செல்பவர்கள் ரயில்களில் பட்டாசுகள், மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர்கள், அடுப்புகள், தீப்பெட்டிகள், சிகரெட்டுகள் போன்ற 6 பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. இவற்றில் உள்ள அனைத்து பொருட்களும் எளிதில் தீப்பற்றக்குடியவை ஆகும்.
4/5
என்ன காரணம்?
ரயிலின் நெருக்கடியான இடங்களில் காற்றோட்டம் குறைவாக இருப்பதாலும், மேற்கூரைகள் உலோகத்தால் இருப்பதாலும் ஒரு சிறிய தீப்பொறியால் கூட விபத்துகள் ஏற்படுவது அதிகம். எனவே, தீபாவளிக்கு ரயில்களில் பயணிப்பவர்கள் இந்த பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது.
5/5
விதிகளை மீறினால் 3 ஆண்டு சிறை
பட்டாசு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை ரயில்களில் எடுத்து செல்வது, ரயில்வே சட்டம் 1989 தொடர்புடைய பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைளை விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் செய்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படடுள்ளது.