பிரபல பாடகி பிரகதி, தான் 10 வருடத்திற்கு முன் பாடிய ஒரு பாடலுக்கு இப்போது வரை பேமண்ட் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கு டிஜே பதிலளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரபல பாடகியான பிரகதி, தான் 10 வருடங்களுக்கு முன்பு பாடிய ‘தேன் குடிக்க’ எனும் பாடலை பாடியதற்கு டீஜே அருணாச்சலம் தனக்கு இன்னும் பேமெண்ட் தரவில்லை என்று கூறியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.
1/5
சூப்பர் சிங்கர் பிரகதி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், பிரகதி. வெளிநாட்டு வாழ் இந்தியரான இவர் தமிழில் பல்வேறு பாடல்களை பாடியிருக்கிறார். அதில் குறிப்பாக டீஜே அருணாச்சலத்துடன் சேர்ந்து இவர் பாடிய ‘தேன் குடிக்க’ பாடல் சூப்பர் ஹிட் ஆன ஒன்று. தற்போது இந்த பாடலால்தான் சர்ச்சை எழுந்துள்ளது.
2/5
தேன் குடிக்க பாடல்
10 வருடங்களுக்கு முன்பு தான் பாடிய இந்த ‘தேன் குடிக்க’ பாடலுக்கு இன்றளவும் தனக்கு டிஜே அருனாச்சலம் பேமெண்ட் தரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இதற்கு டிஜே அருணாச்சலமும் பதில் அளித்திருக்கிறார்.
3/5
பிரகதி வைக்கும் குற்றச்சாட்டுகள்
பிரகதி தன்னுடைய பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: ”நான் கடந்த 10 ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன். என் தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேசி மற்றவர்களைக் குறை கூறும் பழக்கம் எனக்கு இல்லை. நான் இப்போது இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கு என் அமைதியை பலவீனமாகக் கருதியதே காரணம். 2013-ல் வெளியான 'ஆசை' (Aasai) பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, தனது அடுத்த ஆல்பத்திற்காக என்னுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று டீஜே (Teejay) கேட்டார். அவரிடம் போதிய பட்ஜெட் இல்லாததால், வருவாயைப் பகிர்ந்து கொள்வதாக (royalty split) கூறினார். ஒரு நண்பராக நான் அதற்குச் சம்மதித்தேன். அந்தப் பாடலான 'தேன் குடிக்க' (Thean Kudika), உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தமிழ் சுயாதீனப் பாடல்களில் ஒன்றாக மாறியது” என குறிப்பிட்டுள்ளார்.
4/5
பிரகதி vs Teejay
தொடர்ந்து, “தான் ஒரு இசை நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, என்னிடம் உருக்கமாகப் பேசி, 'நஹிலா நஹிலா' (Nahila Nahila) என்ற மற்றொரு பாடலில் இணைந்து பணியாற்றக் கேட்டார். இதிலும் வருவாயைப் பகிர்ந்து கொள்வதாக அவர் உறுதியளித்தார். ஆனால், என் அனுமதியின்றி, முழுமையடையாத ஒரு பதிப்பை அனைத்து தளங்களிலும் அவர் பதிவேற்றிவிட்டார். 'தேன் குடிக்க' அல்லது 'நஹிலா நஹிலா' ஆகிய பாடல்களிலிருந்து, இசையமைப்பாளர் ஸ்டீவ் கிளிஃப் (Steve Cliff) மற்றும் எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை.
'தேன் குடிக்க' பாடலில் என் பெயர் இடம்பெறவே இல்லை; டீஜேவுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு (legal notice) அனுப்பிய பிறகுதான், ஒரு மாதத்திற்கு முன்பு என் பெயர் சேர்க்கப்பட்டது. ஸ்டீவ் கிளிஃபின் பெயர் இன்றுவரை எந்த இசைத் தளத்திலும் இடம்பெறவில்லை. இவ்வளவு நடந்த பிறகும், 'தேன் குடிக்க 2' (Thean Kudika 2) பாடலுக்காக என்னிடம் மீண்டும் வர டீஜேவுக்கு எப்படித்தான் துணிச்சல் வந்ததோ! "நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு, இதற்காக மீண்டும் இணைந்து பணியாற்றலாமா?" என்று கேட்கிறார்” என தெரிவித்திருக்கிறார்.
5/5
டீஜே அளித்த பதில்
டிஜே இதற்கு பதிலளித்திருக்கிறார். அதில், பிரகதி கூறுவது அனைத்தும் ஆதாரமற்றது என்றும், பிரகதியுடன் தான் முதன் முதலில் சேர்ந்து பணியாற்றிய எனக்கொரு ஆசை பாடலுக்கு அவருக்கு பேமெண்ட் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் தேன் குடிக்க பாடலை எடுத்த போது அதில் வேலை செய்தவர்கள் அனைவரும் திறமையை மட்டும் வைத்து, எதையும் எதிர்பார்க்காமல் வந்தவர்கள் என்றும், அப்போது பிரகதியின் தாய்தான் தன் மகளை அப்பாடலில் சம்பளமின்றி கூட பாட வைக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், பாடல் இவ்வளவு பெரிய ஹிட் ஆனதால், நிதி ரீதியான விஷயங்களை இன்னும் பெரிதாக பேசியிருக்கலாம் என சிலர் நினைத்திருந்தால் அதை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும், ஆனால் அதை காரணமாக வைத்து இந்த கொலாபரேஷன் நடக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் தேன் குடிக்க பாடலால் தனக்கு மட்டும் லாபம் வரவில்லை என்றும் கூறியிருக்கிறார். நஹிலா நஹிலா பாடலை சில ஆண்டுகளுக்கு பின்பு பாடிய பிரகதி, அதை அவருடைய அனுமதியின்றி ரிலீஸ் செய்ததற்காக தன்னை சத்தம் போட்டதாகவும், இதற்கு முன்னர் தன்னுடன் அவர் பாடிய பாடல்களுக்கு கூடுதல் பணம் கேட்டதாகவும் டீஜே தெரிவித்துள்ளார். இதை தாங்கள் சட்டரீதியாக அனுகியதாக கூறும் அவர், இப்போது போடப்பட்டிருக்கும் பதிவுகள் முறையற்றது என்றும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.