• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து புதுச்சேரி சட்டப்பேரவை தீர்மானம்

கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து புதுச்சேரி சட்டப்பேரவை தீர்மானம்

Written BySripriya Sambathkumar
Published: Sep 01, 2026, 05:06 PM IST|Updated: Sep 01, 2026, 05:13 PM IST
joinshare
Puducherry Assembly: கர்நாடக மாநிலம் மேகேதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானத்தை புதுச்சேரி சட்டப்பேரவை திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது.

Puducherry Assembly: கர்நாடகாவின் மேகேதாது அணை திட்டம் "புதுச்சேரி மக்களின் நலன்களுக்கு எதிரானது மற்றும் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பிற்கு முரணானது" என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி குறிப்பிட்டார்.

Resolution against Mekedatu Dam Proposal1/7

மேகேதாது அணைக்கு எதிராக தீர்மானம்

கர்நாடக மாநிலம் மேகேதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானத்தை புதுச்சேரி சட்டப்பேரவை திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது. அவையின் அனைத்து உறுப்பினர்களும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
Mekedatu Dam Proposal2/7

மேகேதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய ரங்கசாமி, "தமிழ்நாடு எல்லையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேகேதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு புதுச்சேரி சட்டப்பேரவை தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்கிறது" என்று கூறினார்.
Cauvery Water3/7

காவிரி நதிநீர் பகிர்வு

கர்நாடகாவின் இத்திட்டம் "புதுச்சேரி மக்களின் நலன்களுக்கு எதிரானது மற்றும் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பிற்கு முரணானது" என்று அவர் குறிப்பிட்டார். முன்மொழியப்பட்ட அணை கட்டுமானத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்திய இத்தீர்மானம், அத்தகைய நடவடிக்கை புதுச்சேரி மக்களின் நலன்களைப் பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியது.
Puducherry Government4/7

புதுச்சேரி அரசு

"புதுச்சேரி உட்பட காவிரிப் படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் கர்நாடக அரசு இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடாது என்பதைச் சட்டப்பேரவை வலுவாக வலியுறுத்துகிறது" என்று அத்தீர்மானம் தெரிவித்தது. கர்நாடக அரசு தனது திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இது தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்றும் ரங்கசாமி வலியுறுத்தினார்.
Resolution in Puducherry Assembly5/7

சட்டப்பேரவை ஒருமனதாக ஆதரவு

"காரைக்கால் பகுதியின் நலன்களைப் பாதுகாக்கவும், கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுக்கவும், உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட காவிரி நீர் பங்கீட்டில் புதுச்சேரிக்கு உள்ள நிரந்தர உரிமையைக் காக்கவும்", புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் அனைத்து நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் சட்டப்பேரவை ஒருமனதாகத் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியது.
Puducherry Assembly6/7

தீர்மானத்தை ஆதரித்த எதிர்கட்சிகள்

கர்நாடகாவின் திட்டத்திற்குத் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இத்தீர்மானத்தை ஆதரித்தனர்.
Puducherry Assembly7/7

தற்காலிக சபாநாயகர் ஏ. அன்பழகன்

அன்றைய கூட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய தற்காலிக சபாநாயகர் ஏ. அன்பழகன், முன்மொழியப்பட்ட மேகேதாட்டு அணை திட்டம் காரைக்கால் பகுதி விவசாயிகளைப் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறினார். "இத்திட்டத்தால் காரைக்கால் கடுமையாகப் பாதிக்கப்படும்; அப்பகுதி முற்றிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறும்" என்று அன்பழகன் குறிப்பிட்டார்.
TAGS:
Puducherry

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

2

40 கோடி செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! தமிழ்நாடு அரசு உத்தரவு..

3

Explained: சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? இந்தாண்டு தப்பிக்குமா?

4

கடிப்பிடித்ததால் வந்த விணை! மனைவியின் மார்பு எலும்புகளை உடைத்த கணவன்..

5

ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியில் தவிர்க்க முடியாத தூண்...? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.