Puducherry Bypolls: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். அவர் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
Puducherry Power Cut: புதுச்சேரி குருமாம்பேட் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அக்டோபர் 8-ம் தேதி காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Puducherry News: லாஸ்பேட்டை கல்லூரியில் சீல் வைக்கப்பட்ட தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் EVM எந்திரங்கள்! துணை ராணுவப் படையினரின் 3 அடுக்கு பாதுகாப்பில் வாக்கு எண்ணும் மையம். மேலும் புதுச்சேரி டெங்கு நிலவரம் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள்.
பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக, வாகனத்தை நிறுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரியில் விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Puducherry: புதுச்சேரியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளின் வருகை மற்றும் ரயில் நிறுத்தத்திற்கான வசதிகளை மேம்படுத்த ரயில் தண்டவாளம் மற்றும் பிளாட்பார்ம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Puducherry: கனமழை மற்றும் பலத்த காற்றின் போது, அனுமதியின்றி மற்றும் தற்காலிகமாக வைக்கப்படும் பேனர்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
Puducherry: குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டும் புதுச்சேரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தாயார் புகார் அளித்திருந்தார். அதன் பிறகும் இந்த வழக்கில் காட்டப்பட்ட நடைமுறை தாமதங்கள் மற்றும் அரசின் தயக்கம் ஆகியவற்றைக் கண்டு உயர் நீதிமன்றத்தின் அமர்வு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
Puducherry: இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சிறுமியின் தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.
Puducherry: புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை! தேர்வு பயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குடும்ப/தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் பெரியகடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thattanchavady Bypoll 2026: தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் இ. விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ. எம். சலீம், AINRC சார்பில் அசோக் ஆனந்த் மற்றும் திமுக சார்பில் சேது செல்வம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவை காங்கிரஸ் மற்றும் CPI நாடியுள்ளதால் அக்கட்சியின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையில், இடைத்தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க முதலமைச்சர் என். ரங்கசாமி NDA கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Puducherry Bypolls: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அசாமில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது.
Puducherry: 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பற்றி பேசிய வி. வைத்திலிங்கம், பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். இதில் எந்த வித மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.
புதுச்சேரியில் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் பேசுபொருளாகியுள்ளன. மாநில அந்தஸ்து கோரிக்கை, மேகதாது அணை விவகாரம், மீனவர்களுக்கான டிரால் வலை ஜெட்டி அமைக்கும் கோரிக்கை, அரசு வேலைவாய்ப்பு விதிமுறைகளில் மாற்றம் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதனுடன் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து பிரச்சினை மற்றும் இணைய வழி வங்கி மோசடி போன்ற பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.
Puducherry Assembly: கர்நாடக மாநிலம் மேகேதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானத்தை புதுச்சேரி சட்டப்பேரவை திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது.
Puducherry School Education Department: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி எம்எல்ஏவான வையாபுரி மணிகண்டன், சட்டசபைக்கு தன்னுடைய ஸ்கூட்டரில் வந்த போது ஹெல்மெட் போடாமல் வந்ததால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Puducherry Govt LPG Subsidy Hike: புதுச்சேரியில் கேஸ் சிலிண்டர் மானியத்தை உயர்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.350 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், ஏழை-நடுத்தர மக்களின் நலன் கருதி ரேஷன் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான விரிவான நடைமுறைகள் மற்றும் அரசாணை விரைவில் வெளியாகும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு குடும்பத் தகராறு வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் மீது புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சேரலாதன், மாகி பிராந்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டுள்ளார்.
புதுவை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடரும் நிலையில், மாணவர்கள் நிர்வாக அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், புதுச்சேரி அரசின் 327 காலியிடங்களுக்காக நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான Answer Key ஆகஸ்ட் 23 இரவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24 அன்று தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ₹3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், காரைக்கால் கடற்கரை மேம்பாட்டுக்கு ₹20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் உதவித்தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 15,000 முதியோருக்கு புதிய உதவித்தொகை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, நிரந்தர சபாநாயகரை நியமிக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 20 நாட்கள் பேரவை நடத்த வேண்டும் என்றும் எம்.எல்.ஏ நேரு வலியுறுத்தியுள்ளார்.
காலாவதியான பால் குறித்து விசாரணை தேவை; புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி