Puducherry School Education Department: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
Puducherry News: வாகனம் ஓட்டும்போது வேகக்கட்டுப்பாடு, போக்குவரத்து சிக்னல்களை பின்பற்றுதல், செல்போன் பயன்படுத்தாமல் இருத்தல் போன்ற நடைமுறையில் உள்ள அனைத்து சாலை விதிகளையும் ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1/7
புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரியில் ஆசிரியர் பணியில் இருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
2/7
புதுச்சேரி ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்திற்குமே எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் செய்யும் செயல்கள் அனைவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3/7
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது வேகக்கட்டுப்பாடு, போக்குவரத்து சிக்னல்களை பின்பற்றுதல், செல்போன் பயன்படுத்தாமல் இருத்தல் போன்ற நடைமுறையில் உள்ள அனைத்து சாலை விதிகளையும் ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4/7
ஆசிரியர்கள்
பள்ளிகளுக்கு செல்லும்போது மட்டுமல்லாமல், வீடு திரும்பும்போதும், தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளும்போதும் கூட ஆசிரியர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சமுதாயத்தில் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்பவர்கள் என்பதால், அவர்கள் சாலை விதிகளைக் கச்சிதமாகக் கடைப்பிடிப்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமையும் எனப் பள்ளிக்கல்வித்துறை நம்புகிறது.
5/7
இரு சக்கர வாகன ஓட்டிகள்
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் தலையை பாதுகாக்கும் ஒரு கேடயமாக ஹெல்மெட் பயன்படுகிறது. ஹெல்மெட் அணியும் பழக்கம், தலைக் காயங்களைத் தடுத்து உயிரைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
6/7
புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு கொண்டுவந்துள்ள இந்த நடைமுறை ஆசிரியர்கள் மூலம் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்த நல்ல வழியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது சாலை விபத்துகள் மற்றும் தீவிர காயங்களை குறைப்பதில் பெரிய அளவில் உதவும்.
7/7
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம்
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஹெல்மெட் அணிவதை முழுமையாகக் கடைப்பிடித்து, பாதுகாப்பான போக்குவரத்து கலாச்சாரத்தை உருவாக்க ஆசிரியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.