புதுச்சேரி எம்எல்ஏவான வையாபுரி மணிகண்டன், சட்டசபைக்கு தன்னுடைய ஸ்கூட்டரில் வந்த போது ஹெல்மெட் போடாமல் வந்ததால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
புதுச்சேரி எம்எல்ஏ ஒருவர், ஸ்கூட்டியில் வந்து ஹெல்மெட் போடாததால் அபராதம் வாங்கிய விவகாரம் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
ஸ்கூட்டியில் வந்த MLA
புதுச்சேரியில், அரசு வழங்கிய காருக்கு, டிரைவர் நியமிக்கப்படாததை கண்டித்து, சட்டசபைக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ தன்னுடைய ஸ்கூட்டியில் வந்தார். ஆனால், இவ்வளவு இன்னோவேட்டிவ் ஆக எதிர்ப்பு தெரிவிக்கத்தெரிந்த அவருக்கு ஹெல்மெட் போட வேண்டும் என்பது தெரியவில்லை.
2/5
வையாபுரி மணிகண்டன்
இப்படி செய்த எம்.எல்.ஏவின் பெயர்,வையாபுரி மணிகண்டன். அனைத்திந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், முதியாள்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
3/5
அரசு கார்கள்
புதுச்சேரியில், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த கார்களை இயக்குவதற்கு அரசு சார்பில் டிரைவர்கள் நியமிக்கப்படவில்லை என தெரிகிறது.
4/5
எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான், வையாபுரி மணிகண்டன் சமீபத்தில் சட்டசபைக்கு தன்னுடைய ஸ்கூட்டரில் வந்திருந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் ரூ.1500 வரை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
5/5
ட்ரைவர் ஒதுக்க வேண்டும்
இது குறித்து பேசிய வையபுரி மணிகண்டன், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 3 கார்கள், ட்ரைவர்கள் வரை அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க செல்லும் எம்.எல்.ஏக்களுக்கு ஒரு ட்ரைவர் கூட இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும், முதல்வர் ரங்கசாமி 3 மாதங்களுக்கு முன்பாகவே காரை ஒதுக்கிய போதிலும், அதிகாரிகள் இன்னும் ட்ரைவரை நியமிக்கவில்லை என்றும் சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மறுக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.