Rahu Favourite zodiac: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக இருக்கும் ராகு பகவானுக்கு பிடித்த ராசிகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Rahu Favourite zodiac: ராகு பகவானுக்கு மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள் பிடித்தமானவையாக இருக்கிறது. இவர்களுக்கு ராகுவின் அருள் முழுமையாக கிடைக்கும்.
1/5
ராகு பகவான்
ஜோதிட ரீதியாக 9 கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக ராகு பகவான் அறியப்படுகிறார். ராகு பகவான் அசுப கிரகமாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுப்பார். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நிலையில், ராகு பகவான் சில ராசிகள் பிடித்தமானவையாக இருக்கிறது. அவை என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்.
2/5
ராகு பகவான்
மேஷம் - ராகு பகவானுக்கு மேஷ ராசிக்காரர்கள் மிகவும் பிடித்தவையாக உள்ளன. ராகு பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வாராம். வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சியை மட்டுமே இவர்களுக்கு ராகு பகவான் கொடுப்பார். ராகுவின் ஆசியால் தொழில், வேலையில் தடைகள் நீங்கி, எதிர்பாராத வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைவதோடு, நல்ல காரியங்கள் வீட்டில் நடக்கும். தடைகள் அனைத்து நீங்கும்.
3/5
ராகு பகவான்
விருச்சிகம் - ராகுவின் ஆசி விருச்சிக ராசிக்காரர்களுக்கு முழுமையாக கிடைக்கும். ராகுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்து கைகூடும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகளும் தீரும். எதிர்பாராத வழிகளில் பணம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் பெறுவீர்கள். உங்களுக்கு துன்பங்கள் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி செல்வம் பெருகும். ராகுவின் ஆசியால் வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.
4/5
ராகு பகவான்
மகரம் - ராகுவுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்று மகரம். ராகு பகவான் மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார். வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோஷம் நீடிக்கும். ராகுவின் பார்வையால் உங்களுக்கு தடை நீங்கும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ராகு இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபத்தை கொடுப்பார். தொழில், வேலையில் முன்னேற்றம் மட்டுமே இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
5/5
ராகு பகவான்
கடகம் - ராகுவால் எப்போது சாதகமாக இருக்கு மற்றொரு ராசி கடகம். இந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருள் முழுமையாக கிடைக்கும். தடைகளே இருக்காது. நீண்ட காலமாக தடைபட்ட விஷயங்கள் நடக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உண்டாகும். ராகு வின் அருளால் பணியிடத்திலும் குடும்பத்திலும் மரியாதையும் புகழும் தருவார். வாழ்க்கையில் கஷ்டங்கள் குறையும்.