Rasipalan Today, November 7 Saturday: இன்று (நவம்பர் 7, 2026) சனிக்கிழமை எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்களை இங்கே காணலாம்.
Rasipalan Today, November 7 Saturday: இன்று (நவம்பர் 7, 2026) சனிக்கிழமை எந்த ராசிக்கு சாதகமான நாள்? எந்த ராசிக்கு சிக்கல்? மேஷம் முதல் மீனம் வரை 2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்களை இங்கே காணலாம்.
1/13
மேஷம்
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு மனம் அமைதியாகவும், சிந்தனைகள் ஆழமாகவும் இருக்கும். பணி தொடர்பான விஷயங்கள் படிப்படியாக முன்னேறி, சரியான திசையில் செல்லும். அனுபவம் வாய்ந்த ஒருவரின் அறிவுரை உங்களுக்கு உதவியாக இருக்கும். சோர்வு அல்லது தூக்கமின்மை ஏற்படலாம். ஆகையால், போதுமான ஓய்வு எடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
2/13
ரிஷபம்
புதிய யோசனைகளும் திட்டங்களும் உங்கள் மனதில் தோன்றும். நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்கள் உங்கள் பணிகளில் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் வேலை அல்லது தொழில்முறை முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வருமானம் சீராக இருக்கும், செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
3/13
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம், ஆனால் அனைத்தையும் திறம்படச் சமாளிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும், மேலதிகாரிகள் உங்கள் முயற்சிகளைக் கவனிப்பார்கள். முதுகு அல்லது கால்களில் வலி அல்லது சோர்வு ஏற்படலாம். இன்று போதுமான ஓய்வு எடுப்பது அவசியம்.
4/13
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் இன்று அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவரை தேங்கிக் கிடந்த பணிகள் இப்போது வேகமெடுக்கும். கல்வி, பயணம் அல்லது புதிய திட்டங்களைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் முழு கவனத்துடன் செயல்படுவீர்கள், தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.
5/13
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சற்று அமைதியற்றோ அல்லது கூடுதல் சுமையுடனோ உணரலாம். கடந்த கால நிகழ்வுகள் அல்லது பழைய நபர்களைப் பற்றிய நினைவுகள் உங்கள் மனதில் எழலாம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும், மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
6/13
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் சிந்திப்பதாலோ அல்லது பல பணிகளைச் செய்வதாலோ மனம் சிதறக்கூடும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். உடல் ஆரோக்கிடம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். போதிய தூக்கமின்மை சோர்வு அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம்.
7/13
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இது ஒரு சாதகமான காலம். கடந்த காலத் தவறான புரிதல்களைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். தொழில் வாழ்க்கையில் சமநிலையைப் பேணுவது உங்களுக்குச் சாதகமாக அமையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் அல்லது கூடுதல் பொறுப்புகளை நீங்கள் ஏற்க வேண்டிய சூழல் உருவாகலாம். உங்கள் நிதி நிலை சீராக இருக்கும்
8/13
விருச்சிகம்
உங்கள் தொழில் வாழ்க்கையில் நிலைத்தன்மை இருக்கும். நீண்ட காலமாக நீங்கள் செய்து வந்த கடின உழைப்பிற்கான பலன்கள் இப்போது கிடைக்கத் தொடங்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியம் சீராக இருக்கும்; உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
9/13
தனுசு
பணியிடத்தில் தனுசு ராசிக்காரர்களின் உங்கள் கவனம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையத் தொடங்கும். எதையும் மிக நுணுக்கமாக ஆராய்வீர்கள், ஆனால் அளவுக்கு அதிகமாகச் சிந்திப்பதைத் தவிர்க்கவும். தொழில் ரீதியான சூழல் சீராக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்று உபாதைகள், வாயுத் தொல்லை அல்லது சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
10/13
மகரம்
இன்று முழுதும் மகர ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும், மேலும் உங்களுக்கு அங்கீகாரம் தேடி வரும். மேலதிகாரிகள் அல்லது மூத்த பணியாளர்களின் ஆதரவு கிடைக்கலாம். செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், நிதி விஷயத்தில் சமநிலையைப் பேணுங்கள். ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும்; அதிகப்படியான மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
11/13
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சற்று உணர்ச்சிவசப்படக்கூடும். சிறிய விஷயங்களும் உங்களைப் பாதிக்கலாம். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். வீட்டு விவகாரங்களில் முக்கியப் பங்கு வகிப்பீர்கள். பணியிடத்தில் கூடுதல் முயற்சி தேவைப்படலாம், ஆனால் அது நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நன்மையே தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமானம், தூக்கம் அல்லது மன அழுத்தம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம்.
12/13
மீனம்
பணியில் மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். கல்வி அல்லது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சில நேரங்களில் மனம் அலைபாயலாம் அல்லது கோபம் வரலாம், எனவே பேசும்போது கவனமாக இருக்கவும். மீன ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வு அல்லது தலை பாரம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். வேலை மாற்றம், இடமாற்றம் அல்லது புதிய பொறுப்புகளை ஏற்கும் சூழல் உருவாகலாம். குழந்தகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். நிதி நிலையும் மேம்படும்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.