• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

டெல்லி சரோஜினி நகரில் உள்ள ‘Avenue Towers’ திட்டத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 49 சொகுசு வீடுகளின் ஏலத்தை NBCC திடீரென ரத்து செய்ததை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Written ByR Balaji
Published: Nov 07, 2026, 07:45 PM IST|Updated: Nov 07, 2026, 07:49 PM IST
joinshare
டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

2

டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

3

CM Vijay Diwali Wish: “பாதுகாப்பாக கொண்டாடுங்கள்”.. தீபாவளி வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்!

4

சூரிய நட்சத்திர பெயர்ச்சி.. நவம்பர் 20 வரை இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

5

கோவை பெரியார் அறிவுலக சர்ச்சை.. அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் விளக்கம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

டெல்லியின் சரோஜினி நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் NBCC நிறுவனத்தின் ‘Avenue Towers’ சொகுசு குடியிருப்பு திட்டத்தில், அதிகபட்ச விலைக்கு ஏலம் எடுத்த 49 வீடுகளின் ஏலம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வெற்றி பெற்ற ஏலதாரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் ஏலங்கள் ரத்து செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிலர் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கில் NBCC நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய கட்டிட கட்டுமான கழகமான NBCC, டெல்லியின் சரோஜினி நகர் பகுதியில் ‘Avenue Towers’ என்ற உயர்தர குடியிருப்பை கட்டி வருகிறது. இந்த திட்டத்தில் வீடுகளை ஏலம் விடும் நடைமுறையில் முறைகேடு நடந்ததாக வாங்குபவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிக விலைக்கு ஏலம் எடுத்தவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்ட பின்னரும், அவர்களில் சிலரது ஏலங்கள் மட்டும் தேர்ந்தெடுத்து ரத்து செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நிர்வாக காரணங்களை கூறி ஏலங்கள் ரத்து செய்யப்பட்டதால், அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

பலமுறை மாற்றப்பட்ட ஏல தேதி

முதலில் ஜூலை மாதத்தில் 262 குடியிருப்பு வீடுகளுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. அப்போது, சூப்பர் பில்ட்-அப் பரப்பளவு அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு ரூ.37,161 என்ற அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் ஒரு தரப்பினர் 262 வீடுகளுக்கும் ஏலம் கேட்டதாகவும், மற்றொரு தரப்பினர் 70 முதல் 80 வீடுகளுக்கு ஏலம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஏலம் கேட்டவர்கள் குறைவாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 19ம் தேதி முழு ஏலமும் ரத்து

ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறவிருந்த ஏல நடைமுறையை NBCC நிறுவனம் திடீரென ரத்து செய்தது. நிர்வாக காரணங்களை சுட்டிக்காட்டி, முழு ஏல செயல்முறையும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 3 ஆம் தேதி மீண்டும் 262 வீடுகளுக்கு ஏலம் கோரப்பட்டது. அப்போது நிர்வாக காரணங்களை குறிப்பிட்டு 17 வீடுகளின் ஏலம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, அக்டோபர் 28ம் தேதி அதிகபட்ச விலைக்கு ஏலம் எடுத்த வெற்றியாளர்களின் ஏலங்களும் ரத்து செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், ஏலத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வாங்குபவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த சூழலில், ஏலத்தில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, அவர்களது ஏலங்களை ரத்து செய்ததற்கான காரணம் என்ன என வாங்குபவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏல நடைமுறை ஏற்கெனவே நடைபெற்ற நிலையில், அதை மீண்டும் மீண்டும் ரத்து செய்தது ஏன்? என்றும்,  நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையை விட அதிகமாக ஏலம் கேட்டவர்களின் ஏலங்கள் எவ்வாறு ரத்து செய்யப்பட்டன? என்றும் சிலரின் ஏலங்கள் மட்டும் தேர்ந்தெடுத்து ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்றும் ஏலத்தை ரத்து செய்வதற்கான தெளிவான விளக்கம் ஏன் வழங்கப்படவில்லை? என்றும் கேட்கின்றனர்.

மேலும், NBCC நிறுவனத்தின் முடிவுகள் தன்னிச்சையாகவும் வெளிப்படைத்தன்மையற்றதாகவும் இருப்பதாக வாங்குபவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஏலம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிலர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், வாங்குபவர்களின் புகாரை விசாரித்த நீதிமன்றம், NBCC நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 12ம் தேதி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வீட்டின் விலையும் ரூ.15 கோடிக்கு மேல்!

சரோஜினி நகர் பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு திட்டத்தில், ரத்து செய்யப்பட்ட 49 சொகுசு வீடுகளின் விலை ஒவ்வொன்றும் ரூ.15 கோடிக்கு மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் 4 படுக்கையறைகள் மற்றும் 3 கார் பார்க்கிங் வசதிகளை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஏலத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வாங்குபவர்களின் ஏலங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து NBCC நிறுவனத்தின் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India