சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சிவம் தூபே இன்னொரு அணிக்கு டிரேட் செய்யப்படப்போகிறார் என தகவல்கள் வந்த நிலையில், தற்போது அவர் நிச்சயம் சிஎஸ்கேவில் தொடர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக திகழ்பவர் ஷிவம் தூபே. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அறியப்படும் இவரை கொடுத்து மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை டிரேட் செய்யலாம் என சிஎஸ்கே திட்டமிட்டதாக தகவல்கள் வெளி வந்தன. ஆனால் இப்போதெல்லாம் டிரேட் பேச்சுகள் சைலண்டாகி உள்ளது. அந்த வகையில், தற்போதைய அப்டேட்டை இங்கு காணலாம்.
1/5
சிஎஸ்கே
5 முறை சாம்பியன் அணியான சிஎஸ்கே கடந்த 3 ஆண்டுகளாக ஒருமுறை கூட பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் திணறி வருகிறது. மிடில் ஆர்டரில் ஒரு பினிஷர், சிறப்பான ஆல்-ரவுண்டர், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என பல தேவைகள் சிஎஸ்கேவுக்கு இருக்கிறது. இதற்காக 2027 மினி ஏலத்திற்கு முன் பிற அணிகளிடம் இருந்து டிரேட் செய்யலாம் என சிஎஸ்கே திட்டமிட்டதாக கூறப்பட்டது.
2/5
சிவம் தூபே
அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியா, டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் இருந்து அஷூதோஷ் சர்மா உள்ளிட்டோரை டிரேட் மூலம் பெற திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்த டிரேட் பேச்சுவார்த்தையில் சிவம் தூபேவை சிஎஸ்கே விட்டுத்தர முன்வந்ததாக கூறப்பட்டது. சிவம் தூபேவும் அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
3/5
சூப்பர் கிங்ஸ் அகாடமி
ஆனால், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிவம் தூபே நடந்துகொண்டார். இன்று சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள வைஷ்ணவ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியின் 50வது மையத்தை திறந்துவைத்தார்.
4/5
சிவம் தூபே
சூப்பர் கிங்ஸ் அகாடமி என்பது அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவப் பயிற்சியுடன் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கிரிக்கெட் பயிற்சி மையமாகும். 2022ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. சூப்பர் கிங்ஸ் அகாடமி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மையங்களை இயக்கி வருகிறது. விரைவில் துபாய், கத்தாரிலும் புதிய மையங்களை சூப்பர் கிங்ஸ் அகாடமி தொடங்க உள்ளது.
5/5
சிவம் தூபே
இந்நிலையில், அகாடமி திறப்பு விழாவில் சிவம் தூபே பேசியதாவது, "சென்னைக்கு வருவதை நான் எப்போதும் விரும்புகிறேன். மேலும் உலகம் முழுவதும் 50 மையங்களை நிறைவு செய்துள்ளதாக சூப்பர் கிங்ஸ் அகாடமிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அற்புதமான வசதிகளைப் பயன்படுத்தி, உங்களில் பலர் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களாகவும் உங்களில் சிலர் என்னைப் போலவும் உருவாக வேண்டும் என்று நம்புகிறேன், விரும்புகிறேன்" என கூறினார். டிரேட் வதந்திகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சிவம் தூபே சூப்பர் கிங்ஸ் அகாடமியை திறந்து வைத்திருப்பதன் மூலம் அவர் சிஎஸ்கேவில் தொடர்வார் என பேசப்படுகிறது. வேறு வீரர்களை வைத்தும் சிஎஸ்கே அணியால் இந்த அகாமடமியை திறந்து வைத்திருக்க முடியும். ஆனால், தூபேவை திறக்கவைத்து அனைத்து வதந்திகளையும் மறைமுகமாக தவிடுபொடியாகி உள்ளது, சிஎஸ்கே.