• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தீபாவளி அன்று உருவாகும் நீச்சபங்க ராஜயோகம் - 3 ராசிகளுக்கு பண வரவு அதிகமாகும்

தீபாவளி அன்று உருவாகும் நீச்சபங்க ராஜயோகம் - 3 ராசிகளுக்கு பண வரவு அதிகமாகும்

Written BySudharsan G
Published: Nov 04, 2026, 02:34 PM IST|Updated: Nov 04, 2026, 02:37 PM IST
joinshare
தீபாவளி அன்று ஜாதகத்தின் முதலாம் வீட்டில் சந்திரனும், புதனும் ஒன்றிணைவார்கள். இதனால், நீச்சபங்க ராஜயோகம் உருவாகும். இதனால் பயனடையும் 3 ராசிக்காரர்களை இங்கு காணலாம்.

நவம்பர் 6ஆம் தேதி இரவு கன்னி ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைவார். நீச்சபங்க ராஜயோகத்தால் ரிஷபம், சிம்மம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளுக்கு நன்மை பயக்கும்.

 

Neechabhanga Rajayoga1/6

கன்னி ராசியில் சுக்கிரன்

வேத ஜோதிடத்தின்படி, சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு வாழ்க்கை, திருமண யோகம் உள்ளிட்டவற்றுக்கு காரணமானவர். ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெறும்பட்சத்தில் பெரும் தாக்கம் ஏற்படும். அந்த வகையில், துலாம் ராசியில் இருந்து நவம்பர் 6ஆம் தேதி இரவு கன்னி ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைவார்.
Neechabhanga Rajayoga2/6

உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்

நவம்பர் 8ஆம் தேதி அன்று, சுக்கிர பகவான் கன்னி ராசியில் இருப்பார். கன்னி ராசிக்கு உகந்த புதன் கிரகம் துலாம் ராசியில் இருப்பார். சந்திர பகவானும் அன்றைய தினம் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஜாதகத்தின் முதலாம் வீட்டில் சந்திரனும், புதனும் ஒன்றிணைவார்கள். இதனால், நீச்சபங்க ராஜயோகம் உருவாகும். சுக்கிர பகவான் வக்ர நிலையில் இருப்பார். நீச்சபங்க ராஜயோகத்தால் இந்த மூன்று ராசிகளுக்கு நன்மை பயக்கும்.
Neechabhanga Rajayoga3/6

ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சுக்கிர பகவானுக்கு உகந்த ராசி ரிஷபம். நீச்சபங்க ராஜயோகம் காரணமாக பொருளாதார சூழல் பலமடையும். நீண்டகாலமாக தேங்கி நின்று வேலைகள் மீண்டும் தொடங்கும். ஊழியர்களுக்கு இது பெரும் சாதகமான தருமணமாகும். உங்கள் திறனுக்கு ஏற்ற காரியங்களை செய்து வெற்றியடைவீர்கள், மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வணிகர்களுக்கு சாதகமான காலகட்டமாகும். காதல் உறவும் சிறப்பாக இருக்கும். திருமண உறவில் நீடித்த பிரச்னைகள் சீராகும். இருப்பினும் கவனத்துடன் முதலீடு செய்யவும்.
Neechabhanga Rajayoga4/6

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தீபாவளி தினத்தன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சுபமான தினமாகும். பொருளாதாரம் மேம்படும். புதிய வழியில் வருமானம் குவியும். கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் ஏற்ற பலன்கள் வந்துசேரும். வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வாழ்க்கையில் சந்தோஷ தருணங்கள் வந்துபோகும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் வரும். திருமண வாழ்க்கை சிறப்பாகும். உங்கள் பார்ட்னருடன் நேரத்தை சிறப்பாக செலவிடுவீர்கள்.
Neechabhanga Rajayoga5/6

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சுக்கிர பகவானின் பெயர்ச்சி காரணமாக வேலையிலும், வணிகத்திலும் சிறந்த பலன்கள் கிடைக்கும். ரொம்ப காலமாக வராமல் இருந்த பதவி உயர்வு இந்த நேரத்தில் உறுதியாகும். வணிகர்களுக்கு நல்ல காலம். புதிய தொழில் தொடங்குவதற்கும் இது நல்ல காலம். புதுப்புது தொடர்புகள் உருவாகும். எதிர்காலத்தில் பெரிய தாக்கம் ஏற்படும் முடிவை எடுப்பீர்கள்.
Neechabhanga Rajayoga6/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு புதிய விதிமுறை! அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு புதிய விதிமுறை! அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

2

தீபாவளி சீசனில் விமான கட்டணம் ஏன் 700% வரை உயர்கிறது? உச்சநீதிமன்றம் பதிலும் புதிய விதிகளும்!

3

விராட் கோலி வெறியாட்டம்... ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீட்... இந்திய அணி வெற்றி

4

பயணிகளுக்கு அதிர்ச்சி.. பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. கர்நாடக அரசு அறிவிப்பு!

5

சமூகநீதிப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்: பா.ம.க தலைவர் அன்புமணி இராமதாஸ்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.