Karnataka Bus Fare Hike: அண்டை மாநிலமான கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் அதிரடியாக மாநில அரசு உயர்த்தி உள்ளது. பால் விலை உயர்வைத் தொடர்ந்து, மாநிலத்தில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தின் நான்கு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (கே.எஸ்.ஆர்.டி.சி, பி.எம்.டி.சி, என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி, கே.கே.ஆர்.டி.சி) டிக்கெட் கட்டணத்தில் பெரும் திருத்தத்தை செய்துள்ளது.
கர்நாடகா அரசு கூறுகையில், கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் சராசரியாக 23 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது. பிஎம்டிசி பேருந்துகளில் 33 சதவீதம் முதல் 35 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது. திருத்தப்பட்ட இந்த கட்டணங்கள் நவம்பர் 4ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. பேருந்து கட்டணம் உயர்வு குறித்து அறிவித்த அமைச்சர் பைரதி சுரேஷ், இந்த கட்டண உயர்வு சாதாரண, விரைவு, நீண்ட தூர மற்றும் விமான நிலைய பேருந்து சேவைகளை உள்ளடக்கியது என்று கூறினார்.
கேஎஸ்ஆர்டிசி சாதாரண பேருந்து கட்டணங்கள் ரூ.9 வரை உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பயணச்சீட்டு விலை ஒரே ஒரு முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்றும், 2025-ஆம் ஆண்டிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவிலேயே கர்நாடகா மிகப்பெரிய போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறிய அமைச்சர் பைரதி சுரேஷ், அத்துறையின் செயல்பாடுகள் குறித்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட்டார். மாநிலத்தின் நான்கு போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 26,125 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தென்னிந்தியாவிலேயே அதிகப்படியான பேருந்துகள் இங்கு இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழகங்களில் 1,03,646 ஊழியர்கள் பணியில் உள்ளனர். தினமும் 24,179 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.24 கோடி பயணிகள் பயணிப்பதாக கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், உயர்ந்து வரும் டீசல் விலை, உதிரி பாகங்கள் மற்றும் பேருந்து பராமரிப்புக்கான அதிகரித்து வரும் செலவினம், மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் தேவைப்படுதல் ஆகியவையே பேருந்து கட்டணத் திருத்தத்திற்குக் காரணம் என்று கூறினார். கே.எஸ்.ஆர்.டி.சி, பி.எம்.டி.சி, என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி, கே.கே.ஆர்.டி.சி என நான்கு போக்குவரத்து நிறுவனங்களும் ஆண்டுகக்கு சுமார் ரூ.2000 கோடி நஷ்டத்தை சந்திக்கின்றன என்றும் அவற்றின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய கட்டணத்தில் திருத்தம் செய்வது அவசியம் என போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார்.
மேலும், பேருந்து கட்டணம் உயர்வுக்கு மகளிர் இலவச பயணமாக சக்தி திட்டம்ட காரணமில்லை என்று கூறிய அமைச்சர், இலவச பேருந்தின் இலவச பயணச்சீட்டுகளின் செலவை கர்நாடக அரசு அவர்களுக்குத் திருப்பிச் செலுத்துகிறது. இருப்பினும் பணம் செலுத்துவதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது என்றும் கூறினார்.