• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சுக்கிரன் பெயர்ச்சி: தீபாவளிக்கு முன்பே 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தொடங்கியாச்சு... உங்க ராசி என்ன?

சுக்கிரன் பெயர்ச்சி: தீபாவளிக்கு முன்பே 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தொடங்கியாச்சு... உங்க ராசி என்ன?

Written BySripriya Sambathkumar
Published: Nov 07, 2026, 01:22 PM IST|Updated: Nov 07, 2026, 01:28 PM IST
joinshare
Venus Transit: கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிவிட்டார். இது 5 ராசிகளின் வாழ்வில் நல்ல காலத்தை தொடக்கியுள்ளது. உங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்குமா?

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் ஒரு மங்களகரமான மற்றும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். சுக்கிரனின் அருளால் ஒருவரது வாழ்வில் செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பரமான வசதிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. நவம்பர் 6, 2026 அன்று சுக்கிரன் கன்னி ராசிக்குள் பிரவேசித்துள்ளார். இவர் நவம்பர் 22 வரை, அதாவது அடுத்த 16 நாட்களுக்கு இதே ராசியில் நீடிப்பார். சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுக்கிரன் மீண்டும் கன்னி ராசிக்குத் திரும்பியுள்ளார். சுக்கிர பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பாக ஐந்து ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமான பலன்களைத் தரவுள்ளது. சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்று பார்ப்போம்.

Sukran Peyarchi Palangal1/9

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, உறவுகள், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். அவரது பெயர்ச்சி மனிதர்களின் இந்த அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
Sukran Peyarchi Palangal2/9

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

கன்னியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் இது பொற்காலமாய் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Taurus3/9

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு, நிதி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடிவடையும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். உங்களுக்கு ஏதேனும் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடுவீர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான சூழல் நிலவும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகள் கிடைக்கக்கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
Gemini4/9

மிதுனம்

மிதுன ராசியினருக்கு கன்னியில் சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும். புதிய வழிகளில் செல்வம் வந்து சேரும், அதேபோல் பழைய முதலீடுகள் அல்லது நிலுவையில் இருந்த தொகைகள் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும், உங்கள் அன்புக்குரியவர்களின் வட்டம் விரிவடையும். குடும்பம் தொடர்பான சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். முக்கியமான முயற்சிகளில் வெற்றி கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களைத் தொடங்குவது உங்களுக்கு நன்மையளிக்கும்.
Leo5/9

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு, கன்னியில் சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் நற்பெயரும் உயரும். பாதியில் நின்ற அல்லது முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும்; தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் உங்கள் பிள்ளைகளிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும்.
Virgo6/9

கன்னி

கன்னி ராசியினருக்கு, சுக்கிரன் பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும். குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சி நிதி ரீதியாகப் பலனளிக்கும் வகையில் அமையும். அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். சட்ட விவகாரங்களிலும் வெற்றி கிடைக்கக்கூடும். உங்களுக்கு ஒரு முக்கியமான பணி அல்லது புதிய பொறுப்பு வழங்கப்படலாம். நிதி ஆதாயங்களுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். கடந்த கால முதலீடுகளிலிருந்து நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
Sagittarius7/9

தனுசு

தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு, செல்வத்தை ஈட்டுவதற்கான புதிய வழிகளைத் திறந்துவிடும். உங்களுக்குச் சில சுபச் செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப வட்டம் விரிவடையலாம். நிலம், சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டகும். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் அதிகரிக்கும். உங்கள் நிதி சார்ந்த திட்டங்கள் வெற்றி பெறுவதால், பொருளாதார நிலைத்தன்மை உண்டாகும்.
Venus Transit8/9

சுக்கிரன் அருள் பெற

வாழ்வில் சகல வசதிகளையும் பெற்று நல்வாழ்க்கை நடத்த, ‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே, தனூர் ஹஸ்தாய தீமஹி, தன்னோ சுக்ர ப்ரசோதயாத்' என்ற சுக்கிரன் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
Disclaimer9/9

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

2

டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

3

CM Vijay Diwali Wish: “பாதுகாப்பாக கொண்டாடுங்கள்”.. தீபாவளி வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்!

4

சூரிய நட்சத்திர பெயர்ச்சி.. நவம்பர் 20 வரை இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

5

கோவை பெரியார் அறிவுலக சர்ச்சை.. அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் விளக்கம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.