• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மக்களே உஷார்.. சூரியன் – சனி ஷடாஷ்டக யோகத்தால் சிக்கலில் மாட்டும் 3 ராசிகள்!

மக்களே உஷார்.. சூரியன் – சனி ஷடாஷ்டக யோகத்தால் சிக்கலில் மாட்டும் 3 ராசிகள்!

Written ByR Balaji
Published: Oct 19, 2026, 08:45 PM IST|Updated: Oct 19, 2026, 08:48 PM IST
joinshare

சூரியன் - சனி சேர்க்கையால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தின் காரணமாக கன்னி, துலாம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்கள் ஆரோக்கியம், பணம் மற்றும் பணியிடத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
 

Rasi Palan1/5

சனி – சூரியனால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்!

அக்டோபர் 17 அன்று சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். ஏற்கெனவே மீன ராசியில் சஞ்சரிக்கும் சனியுடன் சூரியன் குறிப்பிட்ட நிலையில் அமைவதால் ஷடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது. இரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8ம் இடங்களில் அமைவது ஷடாஷ்டக யோகமாக கருதப்படுகிறது. இந்த அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு உடல்நலம், குடும்ப உறவுகள், வேலை மற்றும் பண விஷயங்களில் சவால்களை ஏற்படுத்தக்கூடும்.
Rasi Palan2/5

கன்னி – ஆரோக்கியத்தில் கவனம் தேவை

கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கூட்டு தொழிலில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் நிதானமாகச் செயல்பட வேண்டும். அலுவலகப் பணிகளில் கவனக்குறைவைத் தவிர்த்து, அவசர முடிவுகளை எடுக்காமல் இருப்பது அவசியம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருமண முயற்சிகளிலும் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Rasi Palan3/5

துலாம் – வேலையில் கூடுதல் பொறுப்பு!

துலாம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வேலைப்பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கக்கூடும். இதனால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால், எந்தச் சூழலிலும் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் புதிய சவால்களைச் சந்திக்க நேரிடலாம். முதலீடு செய்யத் திட்டமிடுபவர்கள் அதன் சாதக, பாதக அம்சங்களை முழுமையாக ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும். நண்பர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், சொந்தமாகச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
Rasi Palan4/5

தனுசு – பண விஷயங்களில் எச்சரிக்கை!

தனுசு ராசிக்காரர்கள் போட்டி தேர்வுகள் மற்றும் பிற போட்டிகளில் வெற்றி பெற கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம். பணம் தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்ப்பது அவசியம். உடல்நலத்தில் கவனம் செலுத்துவதுடன், அதிக ஆபத்துள்ள முதலீடுகள் மற்றும் சூதாட்டம் போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏற்கெனவே தீர்க்கப்படாமல் இருக்கும் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளது. எனவே, பொறுமையுடனும் திட்டமிட்டும் செயல்படுவது இந்தக் காலகட்டத்தில் உதவியாக இருக்கும்.
Rasi Palan5/5

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

2

சிஎஸ்கே அணிக்குள் வரும் உதய் சகரன்? யார் இவர்? முழு விவரம்!

3

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..யாருக்கெல்லாம்?

4

ஐஐடியில் தொடர் மர்மம்.. பாஜக ஆட்சியில் அதிகரித்த மாணவர்களின் மரணங்கள்.. பகீர் ரிப்போர்ட்!

5

விஜயதசமி 2026 : குழந்தைகளை ‘அ..ஆ’ எழுத வைக்கலாம்! நல்ல நேரம் எது? இதோ முழு விவரம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.