Sun Transit: இன்னும் 4 நாட்களில் சூரியன் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் 8 ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கவுள்ளார்கள். உங்கள் ராசியும் அந்த அதிர்ஷ்டசாலி லிஸ்டில் உள்ளதா?
Suriyan Peyarchi Palangal: சூரியன் ஒன்பது கிரகங்களின் (நவகிரகங்கள்) அரசனாகக் கருதப்படுகிறார். தற்போது, சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், நவம்பர் 16 அன்று விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். விருச்சிக ராசியில் சுமார் ஒரு மாதம் தங்கும் சூரியன், அதன்பிறகு தனுசு ராசிக்குள் நுழைவார். விருச்சிக ராசியில் இருக்கும் இந்த காலகட்டத்தில், சூரியன் எட்டு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார்.
1/10
சூரியன் பெயர்ச்சி பலன்கள்
விருச்சிகத்தில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
2/10
ரிஷபம்
சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். ரிஷப ராசிக்கு இந்த பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இது ஒரு புதிய முயற்சியின் தொடக்கமாக அமையலாம். வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்புகளும் உள்ளன. சூரியனின் ஆற்றலால் கௌரவமும் அந்தஸ்தும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்க வலுவான வாய்ப்புகள் உள்ளன.
3/10
மிதுனம்
விருச்சிகத்தில் சூரியன் பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் வேலையை மிகுந்த தீவிரத்தன்மையுடன் அணுகுவது நல்லது. இவர்களின் நிதி நிலை மேம்படும், மேலும் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முன்னர் செய்த முதலீடுகளால் நன்மை உண்டாகும்.
4/10
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி அனுகூலமான நன்மைகள் அளிக்கும். சூரியனின் இந்த பெயர்ச்சி அனைத்து வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது சிறந்த தொழில் வாய்ப்புகளையும் பல்வேறு நன்மைகளையும் கொண்டு வரக்கூடும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் நிதி நிலையை கணிசமாக வலுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தைப் பெற வாய்ப்புள்ளது. மேலும், இவர்களின் காதல் வாழ்க்கையும் நல்ல பாதையில் செல்லும்.
5/10
துலாம்
துலாம் ராசியினருக்கு சூரிய பெயர்ச்சியின் தாக்கத்தால் அனுகூலமான நன்மைகள் நடக்கும். துலாம் ராசியில் பிறந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறைய வாய்ப்புள்ளது. சூரியனின் அருளால் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் படிப்படியாகச் சீரடையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நிதிச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6/10
விருச்சிகம்
விருச்சிக ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் அந்த ராசியில் பிறந்தவர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். நீங்கள் இல்லற மகிழ்ச்சியை அனுபவிப்பதோடு, உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுவீர்கள். மேலும், சில நல்ல செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வணிக முயற்சிகளிலும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குழ்ந்தைகளால் நன்மை கிடைக்கும்.
7/10
மகரம்
மகர ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் அதிக நன்மைகள் ஏற்படும். சனி கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்த ராசியினருக்கும் சூரியனின் பெயர்ச்சியால் சில குறிப்பிட்ட விஷயங்களில், முன்பை விடச் சூழல் மேம்படும். உறவுகளில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தால், அவை தீரத் தொடங்கும். உங்கள் நிதி நிலையும் வலுவடையும். பண வரவு அதிகமாகும்.
8/10
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இந்தப் பெயர்ச்சி பெரும் நன்மைகளைத் தரும். உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், உங்கள் பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வரவிருக்கும் காலம் மிகவும் சாதகமாக அமையும்.
9/10
மீனம்
சூரியன் பெயச்சி மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஒளி சேர்க்கும். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ராசிக்குள் சூரியன் நுழைவது, இந்த ராசியினருக்கு ஒரு சாதகமான மாற்றமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவடையும், மேலும் இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
10/10
பொறுப்புத் துறப்பு
சூரியன் பெயச்சி மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஒளி சேர்க்கும். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ராசிக்குள் சூரியன் நுழைவது, இந்த ராசியினருக்கு ஒரு சாதகமான மாற்றமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவடையும், மேலும் இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.