• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கை

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கை

Written ByKarthikeyan Sekar
Published: Oct 29, 2026, 01:19 PM IST|Updated: Oct 29, 2026, 01:23 PM IST
joinshare
Tamil Nadu auto fare new rules : தமிழகத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தலை இங்கே பார்க்கலாம்.

Tamil Nadu auto fare new rules : ஆட்டோ கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள அறிவுறுத்தல், பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்
 

Tamil Nadu auto fare new rules1/5

தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்‌ஷா கட்டணங்கள்

தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்‌ஷா கட்டணங்களை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆட்டோ சங்கங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய ஆட்டோ கட்டணங்களை நிர்ணயித்துத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu auto fare new rules2/5

கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணம்

புதிய கட்டண விகிதங்களின்படி, தமிழ்நாடு முழுவதும் முதல் 1.8 கிலோமீட்டர் வரையிலான குறைந்தபட்சப் பயணத் தொலைவிற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பயணிக்கும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், காத்திருப்புக் கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.1 வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu auto fare new rules3/5

கூடுதல் கட்டணங்கள் வசூலிக்க அனுமதி

இரவு 10:00 மணி முதல் காலை 5:00 மணி வரை மேற்கொள்ளப்படும் இரவு நேரப் பயணங்களுக்கு வழக்கமான கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதலாகவும், மலைப்பாதைப் பயணங்களுக்கு வழக்கமான கட்டணத்தை விட 1.2 மடங்கு கட்டணமும் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu auto fare new rules4/5

கட்டண அட்டை பதிவிறக்கம்

ஆட்டோ ரிக்‌ஷா உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அடுத்த 6 மாத காலத்திற்குள் தங்களது வாகனக் கட்டணமானியினைப் (Digital Meter) புதிய கட்டணத்திற்கு ஏற்ப மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை போக்குவரத்துத் துறை இணையதளத்தில் உள்ள கட்டண அட்டையைப் பதிவிறக்கம் செய்து பயணிகள் பார்வைக்கு வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.
Tamil Nadu auto fare new rules5/5

கட்டணமில்லாத் தொலைபேசி

ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள கட்டண அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து அல்லது [https://tnsta.gov.in/](https://tnsta.gov.in/) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகள் கட்டண விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலித்தால், பொதுமக்கள் 1800 425 5430 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
சந்தீப் ராய் ரத்தோர் டிரான்ஸ்பர்... 17 கைதிகள் தப்பியதன் எதிரொலி - தமிழக அரசு அதிரடி

சந்தீப் ராய் ரத்தோர் டிரான்ஸ்பர்... 17 கைதிகள் தப்பியதன் எதிரொலி - தமிழக அரசு அதிரடி

2

மின்வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு

3

தமிழ்நாடு அரசின் மின் மோட்டார் மானியம் ரூ.3.60 லட்சம் பெற யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

4

டிசம்பரில் திருப்பதி செல்ல பிளான் இருக்கா? டிசம்பர் 9 முதல் 27 வரை சென்னை-திருப்பதி ரயில்கள் ரத்து!!

5

'ஆட்சி மாற்றம்' வேண்டி போராடினால் இனி அரசு வேலை கிடையாது: உத்தர பிரதேச அரசு அதிரடி உத்தரவு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.