• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /முதலமைச்சர் பொது நிவாரண நிதி - தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள எச்சரிக்கை

முதலமைச்சர் பொது நிவாரண நிதி - தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள எச்சரிக்கை

Written ByKarthikeyan Sekar
Published: Nov 23, 2026, 12:12 IST|Updated: Nov 23, 2026, 12:16 IST
joinshare
Tamil Nadu CM Relief Fund : முதலமைச்சர் பொது நிவாரண நிதி குறித்த முக்கிய எச்சரிக்கையை கடலூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார்.

Tamil Nadu CM Relief Fund : முதலமைச்சர் பொது நிவாரண நிதி பெற தனியார் அமைப்புகளை அணுக வேண்டாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

Tamil Nadu CM Relief Fund1/5

மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

1. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு - கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் இறப்பு நிவாரணத் தொகை பெறுவதற்குப் பொதுமக்கள் தனியார் அமைப்புகளையோ அல்லது தனிநபர்களையோ அணுக வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Tamil Nadu CM Relief Fund2/5

நிவாரணம் பெறத் தகுதியான விபத்துகள்

2. நிவாரணம் பெறத் தகுதியான விபத்துகள் - ஏரி, குளம், ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழத்தல், பாம்பு கடித்து இறத்தல், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழத்தல் மற்றும் மின்சாரம் தாக்கி இறத்தல் போன்ற எதிர்பாராத விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசின் சார்பில் இறப்பு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
Tamil Nadu CM Relief Fund3/5

விண்ணப்பிக்கும் சரியான நடைமுறை

3. விண்ணப்பிக்கும் சரியான நடைமுறை - இந்த நிவாரண நிதியைப் பெற விரும்பும் வாரிசுதாரர்கள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரை நேரடியாக அணுகி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்ப மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil Nadu CM Relief Fund4/5

நிவாரணத் தொகை வழங்கப்படும் விதம்

4. நிவாரணத் தொகை வழங்கப்படும் விதம் - பொதுமக்கள் சமர்ப்பிக்கும் மனுக்கள் வட்டாட்சியரால் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்படும். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் வழியாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நிவாரணத் தொகை பெற்றுத் தர ஆவணம் செய்யப்படும்.
Tamil Nadu CM Relief Fund5/5

இடைத்தரகர்களைத் தவிர்க்க வேண்டுகோள்

5. இடைத்தரகர்களைத் தவிர்க்க வேண்டுகோள் - அரசு அதிகாரிகள் மூலமாகவே இந்த முழு நடைமுறையும் வெளிப்படையாகச் செயல்படுத்தப்படுவதால், முதலமைச்சரின் நிவாரண நிதியைப் பெறுவதற்காகப் பொதுமக்கள் எவ்விதத் தனியார் அமைப்புகளையும் தனிநபர்களையும் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

2

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

3

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

4

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

5

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.