Tamil Nadu Government business loan : உணவுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Government business loan : ராணிப்பேட்டை மாவட்ட மக்களே, உணவுத் தொழிலில் ஈடுபடும் ஐடியா இருந்தால் உடனே விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். முழு விவரம் இங்கே
1/6
1. திட்டத்தின் அறிமுகம் மற்றும் இலக்கு:
1. திட்டத்தின் அறிமுகம் மற்றும் இலக்கு: இராணிப்பேட்டை மாவட்டத்தில் குறு உணவு பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில், மாவட்ட தொழில் மையம் மூலம் ‘பிரதம மந்திரியின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம்’ (PMFME) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 146 பயனாளிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியா ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
2/6
2. திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
2. திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்: ஏற்கனவே குறு உணவு பதப்படுத்தும் தொழில் செய்து வருபவர்களுக்கும், புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தகுதியான தொழில் முனைவோருக்கும் வங்கிக் கடனுடன் இணைந்த மானிய உதவி வழங்கப்படுகிறது. தொழில்களை நவீனப்படுத்துதல், விரிவாக்கம் செய்தல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
3/6
3. தொடங்கக்கூடிய தொழில்கள்:
3. தொடங்கக்கூடிய தொழில்கள்: மாவு மில், எண்ணெய் மில், அரிசி ஆலை மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்களை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளலாம்.
4/6
4. பிற தகுதியான உணவு தயாரிப்புகள்:
4. பிற தகுதியான உணவு தயாரிப்புகள்: பேக்கரி மற்றும் மசாலா பொருட்கள் தயாரித்தல், முறுக்கு, மிக்சர், சிப்ஸ் போன்ற சிற்றுண்டி வகைகள் தயாரித்தல் மற்றும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
5/6
5. நிதி உதவி மற்றும் மானிய விவரம்:
5. நிதி உதவி மற்றும் மானிய விவரம்: தகுதியான பயனாளிகளுக்கு திட்டச் செலவில் 35 சதவீதம் வரை, அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடனுடன் இணைந்த மானியம் வழங்கப்படும். பயனாளியின் பங்களிப்பாக குறைந்தபட்சம் 10 சதவீதம் இருக்க வேண்டும்; மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்படும்.
6/6
6. தொழில்முனைவோருக்கு அழைப்பு மற்றும் தொடர்பு எண்கள்:
6. தொழில்முனைவோருக்கு அழைப்பு மற்றும் தொடர்பு எண்கள்: புதிய தொழில் தொடங்கவும், இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் தொழில் முனைவோர் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு DRP 1 - காயத்ரி 7092656497 மற்றும் DRP 2 - சங்கர் 8883265019 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.