• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Written ByKarthikeyan Sekar
Published: Nov 14, 2026, 17:42 IST|Updated: Nov 14, 2026, 17:47 IST
joinshare
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.4,500 முதல் ரூ.10,000 வரை ஸ்காலர்ஷிப். முழு விவரம்

UDID அட்டை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Tamil Nadu scholarship1/5

CSR கல்வி உதவித்தொகை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு CSR கல்வி உதவித்தொகை : தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் (CwD) கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, 'சமக்ர சிக்ஷா' மற்றும் 'பெட்ரோலியம் ஹவுஸ்' நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் சிறப்பு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Tamil Nadu scholarship2/5

யார் விண்ணப்பிக்கலாம்?

யார் விண்ணப்பிக்கலாம்? மதிப்பெண் தடையில்லை : தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும், குறைந்தபட்சம் 40 சதவீத உடல் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆவர். இந்த உதவித்தொகை பெற மதிப்பெண் வரம்பு எதுவும் கிடையாது; மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்குத் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
Tamil Nadu scholarship3/5

உதவித்தொகை விவரம்

உதவித்தொகை விவரம் மற்றும் வருமான வரம்பு : இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு தகுதியான மாணவருக்கும் ரூ.4,500 முதல் ரூ.10,000 வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் (DBT) செலுத்தப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
Tamil Nadu scholarship4/5

சரிபார்ப்பு கட்டாயம்

UDID அட்டை மற்றும் ஆவண சரிபார்ப்பு கட்டாயம் : பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் தகுதியான மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களின் தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை சரிபார்த்து 40% குறைபாட்டை உறுதி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் UDID சான்றிதழ் நகல் மற்றும் வருமானச் சான்று நகல்களை இணைத்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
Tamil Nadu scholarship5/5

ஒரு மாணவர் கூட விடுபடக்கூடாது

ஒரு மாணவர் கூட விடுபடக்கூடாது என உத்தரவு : மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுச் சரிபார்க்க 10.11.2026 என்றும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப 15.11.2026 என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தெரியாமல் ஒரு தகுதியான மாணவர் கூட விடுபட்டுவிடக் கூடாது என அலுவலர்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

2

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

3

2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..

4

இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

5

சென்னை: இந்த பகுதிகளில் நாளை (நவம்பர் 25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்... உங்க ஏரியாவில் தண்ணீர் வருமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.