• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /18 முதல் 25 வயதுடையவரா? மாதம் ரூ.9,000 உதவித்தொகை – உடனே அப்ளை பண்ணுங்க!

18 முதல் 25 வயதுடையவரா? மாதம் ரூ.9,000 உதவித்தொகை – உடனே அப்ளை பண்ணுங்க!

Written ByKarthikeyan Sekar
Published: Oct 06, 2026, 05:32 PM IST|Updated: Oct 06, 2026, 05:35 PM IST
joinshare
Tamil Nadu government internship : தமிழ்நாடு அரசு கொடுக்கும் 9 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப் பயிற்சியில் கலந்து கொள்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu government internship : தமிழ்நாடு அரசு சார்பில் தருமபுரி மாவட்டத்தில் மாதம் ரூ.9000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Tamil Nadu government internship1/7

பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டம்

பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டம் : தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் இளைஞர்களுக்கான 'பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப்' திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியானது 6 முதல் 9 மாத கால அளவுக்கு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu government internship2/7

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன? : இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் உள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Tamil Nadu government internship3/7

தேவையான கல்வித்தகுதிகள்

தேவையான கல்வித்தகுதிகள் : ஐ.டி.ஐ (ITI), 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ (Diploma) மற்றும் டிகிரி (BE, BA, BSc, B.Com உள்ளிட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு) முடித்தவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
Tamil Nadu government internship4/7

மாதாந்திர உதவித்தொகை

மாதாந்திர உதவித்தொகை : பயிற்சி பெறும் காலத்தில் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக (Stipend) ரூ.9,000 வழங்கப்படும். இதுதவிர, தற்செயலான பிற செலவுகளுக்காக ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தொகையாக ரூ.6,000 தனியாக அளிக்கப்படும்.
Tamil Nadu government internship5/7

விண்ணப்பிக்கும் முறை,

விண்ணப்பிக்கும் முறை, இணையதளம் : தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pminternship.mca.gov.in என்ற முகவரிக்குச் சென்று நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu government internship6/7

விண்ணப்பிக்கக் கடைசி வாய்ப்பு

விண்ணப்பிக்கக் கடைசி வாய்ப்பு : கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு கொண்ட தருமபுரி மாவட்ட இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, வரும் டிசம்பர் 2026-க்குள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tamil Nadu government internship7/7

தொடர்பு எண்கள்

கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு எண்கள் : மேலும் கூடுதல் தகவல்களைப் பெற மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்தில் உள்ள திறனகத்தை (DSO) அணுகலாம். தொடர்புக்கு: 9080276172, 8778806180 மற்றும் 04342-288099.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழக அரசின் இலவச லேப்டாப் சிப்-லெவல் பயிற்சி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

தமிழக அரசின் இலவச லேப்டாப் சிப்-லெவல் பயிற்சி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

2

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூட்ரினோ ஆய்வு! இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற பிரான்சிஸ் ஹால்சன்

3

VDA உயர்வு: விவசாயம், கட்டுமானம்... அக்டோபர் 1 முதல் தொழிலாளர்களுக்கு அதிகரித்த குறைந்தபட்ச ஊதியம்

4

Explainer: ஊதிய உச்சவரம்பால் EPS ஓய்வூதியத்தில் எற்பட்டுள்ள முக்கிய மாற்றம் என்ன? EPFO விளக்கம்

5

பிக்பாஸ் 10 : எவிக்ட் ஆன சவின்யா..அஸ்மிதாவை வசை பாடி வீடியோ! என்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.