தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் சமீபத்தில் தொடங்கியதை அடுத்து, இதில் எவிக்ஷன் லிஸ்டில் இருந்து பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய சவின்யா, சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 8வது சீசன் முதல், விஜய் சேதுபதி கைக்கு இந்த நிகழ்ச்சி மாறியது. இதையடுத்து, மூன்று சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 10வது சீசனை தொட்டிருக்கிறது. இந்த சீசன் ஆரம்பித்து சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது இந்நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தையும் எட்டி இருக்கிறது.
கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டிலிருந்து மூன்று பேர் எவிக்ட் செய்யப்படுவார்கள் என்றும், மூன்று பேர் வைல்ட் கார்ட் மூலமாக உள்நுழைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில், வைல்ட் கார்ட் மூலம் போட்டிக்குள் நுழைந்த குமரன், ரூ.5 லட்ச பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு தான் தன்னுடைய தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்ட வீட்டை விட்டு வெளியேறினார்.
வார இறுதி எபிசோடில், அஸ்மிதாவுடன் ரோப் கட்டி வைக்கப்பட்டிருந்த சவின்யாவும், தான்யாவுடன் கயிறு கட்டி வைக்கப்பட்டிருந்த ஜாவீத்தும் வீட்டை விட்டு வெளியேறினர்.
எவிக்ஷனில் வெளியேறி மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் திரும்பி வந்த போட்டியாளர்களிடையே யார் பிக்பாஸ் வீட்டில் இருப்பது எனும் கேள்வி எழுந்தது. இதில், அஸ்மிதா-சவின்யா ஆகிய இருவருக்கும் சேர்த்து ரோப் கட்டப்பட்டது. இதற்கு அர்த்தம் அவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதுதான். இதனால், அவர்களுக்குள் எந்நேரமும் சண்டை வந்து கொண்டே இருந்தது.
ஒரு முறை, அஸ்மிதா தான் குளிக்க போக வேண்டும் என்று கூற அதற்கு சவின்யா தான் எழுந்து வர மாட்டேன் என்று அடம் பிடித்தார். சவின்யா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதாக கூறி, பேட் மாற்ற செல்ல வேண்டும் என்று கூறி அஸ்மிதாவை அழைத்தார். ஆனால், அஸ்மிதா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. இப்படி இவர்களுக்குள் வீட்டில் இருக்கும் போது பல ஆயிரம் சண்டைகள் வந்தன.
சவின்யா, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு ஒரு வீடியோவை போட்டிருக்கிறார். அதில், அஸ்மிதா மீது சில குற்றச்சாட்டுகளையும் அவர் வைத்திருக்கிறார்.
தான் இந்த விஷயத்தை எந்த காரணத்திற்காகவும் வெளியே சொல்லவே கூடாது என நினைத்து கொண்டிருந்ததாகவும், ஆனால் அஸ்மிதாவுக்கு பிஆர் வேலை பார்ப்பவர்கள் தன்னை இதை சொல்ல வைக்க தூண்டி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
தான் எவிக்டும், அஸ்மிதா போட்டியாளராகவும் இருப்பதற்கு காரணம் நான் தான் என்று கூறி இருக்கும் அவர், போட்டியில் 2 முறை அஸ்மிதா ரோப்பை கழற்றியதாகவும், அப்போது தான் தான் அவரிடம் ரோப்பை கட்டுங்க என்று அறிவுருத்தியதாகவும் கூறினார்.
மேலும், இதை வீக் எண்டில் கூறியிருந்தால் தான் எவிக்ட் ஆகியிருக்க மாட்டேன் என்று கூறும் அவர், தன்னை அனைவரும் டர்ட்டி கேம் விளையாடுவதாக கூறுவதாகவும், அதை செய்தது அஸ்மித தான் என்றும் கூறுகிறார்.
சனிக்கிழமையன்று தான் பேடை மாற்ற வேண்டும் என்று கேட்டதாகவும், அப்போது தன்னுடைய உடலை அசைக்கவே முடியவில்லை என்று சவின்யா நடித்ததாகவும், ஆனால் பாட்டு போட்ட உடனே நடனமாடியதாகவும் தெரிவித்தார். இதை அவர் பெயரை கெடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றும், தன் பெயரை கெடுப்பதற்காக சிலர் வேலை பார்ப்பதால் இதை சொல்ல வேண்டியதாய் இருப்பதாகவும் தெரிவித்தார்.