தமிழக எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தது, சட்டமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. அதாவது திமுக எம்எல்ஏக்கள் யாருக்கும் கார் வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கிடையில், சில எம்எல்ஏக்கள் காஸ்ட்லி கார் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு எதற்கு அரசு சார்பில் கார்கள் என பொதுமக்கள் கொந்தளித்தனர். இந்த நிலையில், காஸ்ட்லி கார் வைத்திருக்கும் டாப் 7 தமிழக எம்எல்ஏ-க்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1/7
விலையுர்ந்த கார்கள்
எஸ். கதிரவன் (திமுக): காஸ்ட்லி கார் வைத்திருக்கும் டாப் 7 தமிழக எம்எல்ஏக்கள் பட்டியலில் 7வது இடத்தில் இருப்பவர் திமுகவை சேர்ந்த மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ எஸ். கதிரவன் என்பவர். இவர் ரூ. 1.33 கோடி மதிப்புள்ள டொயோட்டா VellFire கார் வைத்துள்ளார்.
2/7
விலையுர்ந்த கார்கள்
டி.டி. பிரவீன் (காங்கிரஸ்): காஸ்ட்லி கார் வைத்திருக்கும் டாப் 7 தமிழக எம்எல்ஏக்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விளவங்கோடு எம்எல்ஏ டி.டி. பிரவீன் உள்ளார். அவர் ரூ. 1.35 கோடி மதிப்புள்ள டொயோட்டா Land Cruiser கார் வைத்துள்ளார்.
3/7
விலையுர்ந்த கார்கள்
லீமா ரோஸ் (அதிமுக): காஸ்ட்லி கார் வைத்திருக்கும் டாப் 7 தமிழக எம்எல்ஏ-க்கள் பட்டியலில் 5 வது இடத்தில் அதிமுகவை சேர்ந்த லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் உள்ளார். அவர் ரூ. 1.57 கோடி மதிப்புள்ள Lexus LX570 கார் வைத்திருக்கிறார்.
4/7
விலையுர்ந்த கார்கள்
முதல்வர் விஜய்: காஸ்ட்லி கார் வைத்திருக்கும் தமிழக எம்எல்ஏ-க்கள் பட்டியலில் 4ம் இடத்தில் முதலமைச்சர் விஜய் உள்ளார். அவர் ரூ. 1.63 கோடி மதிப்புள்ள டொயோட்டா vellfire கார் வைத்திருக்கிறார்.
5/7
விலையுர்ந்த கார்கள்
முதல்வர் விஜய்: காஸ்ட்லி கார் வைத்திருக்கும் தமிழக எம்எல்ஏ-க்கள் பட்டியலில் 3 வது இடத்தில் மீண்டும் முதலவர் விஜய்யே உள்ளார். அவர் ரூ. 2.01 கோடி மதிப்புள்ள டொயோட்டா NMW 17 கார் வைத்திருக்கிறார்.
6/7
விலையுர்ந்த கார்கள்
பிரேமலதா: காஸ்ட்லி கார் வைத்திருக்கும் தமிழக எம்எல்ஏக்களில் பிரேமலதா இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் ரூ. 2.19 கோடி மதிப்புள்ள டொயோட்டா Land Cruiser கார் வைத்திருக்கிறார்.
7/7
விலையுர்ந்த கார்கள்
முதல்வர் விஜய்: காஸ்ட்லி கார் வைத்திருக்கும் தமிழக எம்எல்ஏ-க்கள் பட்டியலின் முதல் இடத்தில் முதலமைச்சர் விஜய் உள்ளார். அவர் ரூ. 3.07 கோடி மதிப்புள்ள டொயோட்டா Lexus 350H கார் வைத்திருக்கிறார். விஜய் இப்பட்டியலில் மூன்றாவது முறையாக இடம் பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.