Scholarship : கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொகை அப்டேட் அரசு வெளியிட்டுள்ளது.
Scholarship : கல்லூரி, மாணவ மாணவிகள் பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
1/6
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) [ம] சீர்மரபினர் (சீ.ம) மாணவ/மாணவியருக்கு 2026-27 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2/6
கல்வி உதவித்தொகை அப்டேட்
1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/ மி.பி.வ/ சீ.ம மாணவ/ மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
3/6
ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-
II. பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை (ம) ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
4/6
விண்ணப்பிக்கும் முறை:
2) விண்ணப்பிக்கும் முறை: 2026-27 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், University Management Information System (UMIS) (https://umls.tn.gov.n/) என்ற இ ணையதளம் மூலம் பெறப்படுகிறது.
5/6
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
3) தகுதியுள்ள மாணக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 21.10.2026 வரை கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
6/6
கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு....
4) கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.