• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தமிழகத்தில் நாளை (நவ.30) 7 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? மின்வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை (நவ.30) 7 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? மின்வாரியம் அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 29, 2026, 17:23 IST|Updated: Nov 29, 2026, 17:32 IST
joinshare
TN Power Cut November 30: தமிழகத்தில் நாளை (நவம்பர் 30) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்தள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Power Cut November 30:  சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. 
 

TN Power Cut November 301/5

தமிழகத்தில் நாளை (நவம்பர் 30) மின்தடை

தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மாதாந்திர பணிகளுக்காக மின்வாரியம் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (நவம்பர் 30) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் காலை 9 மணி முதல் 2 மணி வரையும், மற்ற மாவட்டங்களில் மாலை 4 மணி வரையும் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Power Cut November 302/5

சென்னையில் மின்தடை

சென்னையில் சேலையூர், யசுவந்த் நகர், பரசுநாத் அவென்யூ, புவனேஸ்வரி நகர், பாக்கியலட்சுமி நகர், கிரேட்டட் கைலேஷ் அவென்யூ, ஏ.எஸ்.கே. நகர், ஆண்டாள் நகர், காந்தி நகர், பார்வதி நகர். கோவிலம்பாக்கம்: வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்தூர், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர். நகர். நன்மங்கலம்: ஹஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் பிரதான சாலை. அலமாதி: கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேத்துப்பாக்கம், குருவாயல், காரணி, அம்மனக்பாக்கம், ராமாபுரம் பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
TN Power Cut November 303/5

திண்டுக்கல், கும்பகோணத்தில் மின்தடை

ஓட்டச்சத்திம் பகுதியில் ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர், சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி, வேடசந்தூர், சேனன்கோட்டை, சுல்லேறும்பு, நடுப்பட்டி, வெள்ளனம்பட்டி, அரியபூதம்பட்டி பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. கும்பகோணம் பகுதியில் திருநாகேஸ்வரம், திருநீலக்குடி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
TN Power Cut November 304/5

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம் சுற்றுவட்டாரப் பகுதிகள். திருநாகேஸ்வரம் துணை மின்நிலையம்: திருநாகேஸ்வரம், திருநீலக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள். வல்லம் துணை மின்நிலையம் பகுதியில் மின் நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள். புதுக்கோட்டையில் கொடிகுளம் துணை மின்நிலையம்: கொடிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
TN Power Cut November 305/5

கோவையில் நாளை மின்தடை

கோவை மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவொளிநகர், சீராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மேற்கண்ட இடங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் வழக்கம்போல் மின்விநியோகம் இருக்கும். எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 30-க்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதுடன் இதையும் செய்வது அவசியம்

ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 30-க்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதுடன் இதையும் செய்வது அவசியம்

2

தேர்வு கிடையாது! சென்னை மாநகராட்சியில் 173 காலிப் பணியிடங்கள்.. 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

3

குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

4

“அப்பாவை காணோம்” என கலாய்த்த தவெக-இப்போ டெல்லியே தேடி வருது! MKS மாஸ் கம்பேக்..

5

டிசம்பர் முதல் வெளுக்கப்போகும் கனமழை.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.