Tamil Nadu Presenceless Registration: வருகையில்லா ஆவணப்பதிவு குறித்து சேலம் மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் முக்கிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
Tamil Nadu Presenceless Registration: சேலம் மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் வருகையில்லா ஆவணப்பதிவு குறித்து லேட்டஸ்டாக கொடுத்திருக்கும் முக்கிய அப்டேட்டை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
1/7
வருகையில்லா ஆவணப்பதிவு
சேலம் மாவட்டத்தில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) முறையின் மூலம் வருகின்ற 17.08.2026 முதல் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல், 24x7 இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்து, மின்னணு ஆவணமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2/7
பதிவுத்துறை அறிவிப்பு
இதுகுறித்து சேலம் மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் திருமதி செ.சுபிதாலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளதாவது ; தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறையில் வெளிப்படைத் தன்மையையும், பொதுமக்களின் வசதியையும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
3/7
Presenceless Registration latest news
இதன் ஒரு பகுதியாக அடுக்குமாடி குடியிருப்பு (Flat) மற்றும் மனைப்பிரிவு (Plot)-களின் முதல் விற்பனை (First Sale) மற்றும் இவ்வாவணங்களின் தொடர்ச்சியாக பதிவு செய்யப்படும் உரிமை ஆவணம் ஒப்படைப்பு (Memorandum of Deposit of Title Deed) ஆகிய ஆவணங்களைப் பொறுத்து 17.08.2026 முதல் "வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration)" முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
4/7
நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு
மேற்படி, ஆவணங்களைப் பொறுத்து நேரடி வருகையில்லா ஆவணப்பதிவின் வாயிலாக பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் (24x7x365) இணையதளத்தின் மூலம் தங்களது ஆவணத்தினை தாக்கல் செய்து கொள்ள முடியும்.
5/7
மின்னணு ஆவணமாக அனுப்புதல்
இணைய வழியில் பதிவுக்கு தாக்கல் செய்யும்போது, சொத்தினை எழுதிக்கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர்களின் அடையாளமானது விரல் ரேகை ஆதார் ஆணையத்துடன் சரிபார்க்கப்பட்டு, இணைய வழி கட்டணம் செலுத்திய உடன், சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விபரங்கள்
இருக்கும்பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்து, சரியாக சார்பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக, இணையதள வழியாக ஆவணதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
6/7
60 நாட்களுக்குள் தரவிறக்கம்
மேலும், ஆவணம் மற்றும் ரசீது ஆகியவற்றினை ஆவணதாரர் தங்களது உள்நுழைவு / இணையவழி செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (Login/Email)-இல் 60 நாட்களுக்குள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7/7
சேலம் மண்டல துணைப்பதிவுத்துறை தலைவர்
மேலும், வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் பதிவு செய்யப்படும் கிரய ஆவணங்களைப் பொறுத்து தானியங்கி பட்டா மாறுதல் (Automatic Patta Mutation) முறையில் ஆவணம் பதிவு செய்த உடன் பட்டா மாறுதல் செய்யப்படும் என சேலம் மண்டல துணைப்பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.