• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /கோயில்களில் செல்போன் தடை: பக்தர்கள் கடும் அதிருப்தி - மறுபரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

கோயில்களில் செல்போன் தடை: பக்தர்கள் கடும் அதிருப்தி - மறுபரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

Written ByKarthikeyan Sekar
Published: Sep 05, 2026, 09:34 PM IST|Updated: Sep 05, 2026, 09:39 PM IST
joinshare
கோயில்களில் செல்போன் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பிரபலமான கோயில்களில் செல்போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 

Tamil Nadu Temples Mobile Phone Ban Rules1/8

முழுமையான தடை

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திருக்கோயில்களில் வழிபாட்டின் புனிதம் மற்றும் பாதுகாப்பைப் பேணுகிறோம் என்ற பெயரில் செல்போன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை, பக்தர்கள் மத்தியில் பெரும் நடைமுறைச் சிக்கல்களையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் ரீல்ஸ் எடுப்பது மற்றும் விதிமீறல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த, ஒட்டுமொத்தப் பக்தர்களின் அடிப்படைப் பாதுகாப்புக் கருவியான செல்போனைப் பறிப்பது நியாயமா என்ற கேள்வி வலுத்துள்ளது.
Tamil Nadu Temples Mobile Phone Ban Rules2/8

அதிருப்தி

அண்டை மாநிலமான கேரளாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் சபரிமலையிலேயே கூட செல்போன் கொண்டு செல்ல முழுமையான தடை இல்லாத நிலையில், பழனி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்களில் வாசலிலேயே போன்களைப் பறிமுதல் செய்யும் நடைமுறை பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu Temples Mobile Phone Ban Rules3/8

அவசர மருத்துவ உதவி

பழனி, திருத்தணி போன்ற மலைக் கோயில்களில் முதியவர்கள், குழந்தைகளுடன் நடைபயணமாகச் செல்லும்போது திடீர் மூச்சுத்திணறல், மாரடைப்பு அல்லது மயக்கம் ஏற்பட்டால், உடன் இருப்பவர்களால் அவசர மருத்துவ உதவியை உடனடியாக அழைக்க முடிவதில்லை. ஆங்காங்கே அவசர உதவி எண்கள் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தாலும், கையில் தொலைபேசி இல்லாமல் அந்த எண்களை எவ்வாறு தொடர்புகொள்வது என்ற கேள்வி எழுகிறது.
Tamil Nadu Temples Mobile Phone Ban Rules4/8

மைக் மூலம் அறிவிப்பு

திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசலில் குடும்ப உறுப்பினர்கள் பிரிந்துவிட்டால், அவர்களைத் தொடர்புகொள்ள வழியின்றித் தவிக்க நேரிடுகிறது. கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று மைக் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றாலும் கூட, நெரிசலைக் கடந்து நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
Tamil Nadu Temples Mobile Phone Ban Rules5/8

மிகக் கடுமையான தடை

மேலும், தரிசனம் முடிந்து திரும்பும்போது போன்களைப் பெற மீண்டும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது தேவையற்ற அலைச்சலையும் மனக்கசப்பையும் தருகிறது. எனவே, மூலவர் சன்னதி மற்றும் உள் பிரகாரங்களில் மட்டும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் பேசுவதற்கும் மிகக் கடுமையான தடைகளை அமல்படுத்தலாம்.
Tamil Nadu Temples Mobile Phone Ban Rules6/8

அபராதம் விதிக்கலாம்

மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கலாம். ஆனால், அவசரத் தேவைகளுக்காக வெளிப்பிரகாரம், கிரிவலம் மற்றும் மலைப்பாதைகளில் போனை சைலண்ட் மோடில் வைத்திருக்க அனுமதிக்கலாம்.
Tamil Nadu Temples Mobile Phone Ban Rules7/8

உண்மையான அமைதி

ஆன்மீகம் என்பது அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி அமைதி பெறுவதற்கான இடம். குடும்பத்தினர் எங்கே பிரிந்து போனார்களோ, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யாரை அழைப்பது என்ற பதற்றத்துடனேயே வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு அங்கு உண்மையான அமைதி கிடைப்பது சாத்தியமில்லை.
Tamil Nadu Temples Mobile Phone Ban Rules8/8

கோரிக்கை

எனவே, பக்தர்களின் உண்மையான பாதுகாப்பையும் நடைமுறைத் தேவைகளையும் உணர்ந்து, முழுமையான தடையைத் தளர்த்தி நடைமுறைக்கு உகந்த நடுநிலையான விதிகளைத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உருவாக்க வேண்டும் என்பதே பக்தர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
இஷான் கிஷன் விலகல்... பிளேயிங் 11-ல் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இல்லை - ஏன்?

இஷான் கிஷன் விலகல்... பிளேயிங் 11-ல் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இல்லை - ஏன்?

2

தேசபக்தி குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை: அண்ணாமலை

3

தூத்துக்குடி: தாய் கொலை.. 2 சிறுமிகள் கடத்தப்பட்டது ஏன்? நள்ளிரவு 1 மணிக்கு நடந்தது என்ன?

4

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: மொபைல் போன் மூலம் நொடிகளில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?

5

இனி திமுகவால் ஜெயிக்கவே முடியாது... அடித்துச் சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.