Tasmac Shop Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அக்டோபர் 2ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tasmac Shop Holiday: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் 100 கோடி ரூபாய்க்கு மேல்ல் வருமானம் வருகிறது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் பல மடங்கு டாஸ்மாக்கில் வருமானம் கிடைக்கிறது. அதே நேரத்தில், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
2/5
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அதாவது, குடியரசு தினம், திருவள்ளூர் தினம், மே தினம், மீலாது நபி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3/5
டாஸ்டாக் கடைகளுக்கு அக்டோபர் 2 விடுமுறை
காந்தி ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்வரும் அக்டோபர் 2 (வெள்ளிக்கிழமை)காந்தி ஜெயந்தி” தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள FL3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவற்றில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது.
4/5
விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை
விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன் படியும், (Tamilnadu Liquor license and Permit) Rules 1989-ன் படியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
5/5
அக்டோபர் 3 முதல் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்படும்
மேலும், அக்டோபர் 3ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்பட உள்ளது. எனவே, அக்டோபர் 2ஆம் தேதி மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.