Thaimaman thanga mothiram thittam : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்த அப்டேட்
Thaimaman thanga mothiram thittam : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ள புதிய அறிவிப்பில் என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்
1/6
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
1. 2,924 பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஜூன் 22, 2026 முதல் பிறந்த 2,924 பச்சிளம் குழந்தைகள் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்' கீழ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் தெரிவித்துள்ளார்.
2/6
மதுரை இராசாசி மருத்துவமனை
2. மதுரை இராசாசி மருத்துவமனையில் தொடங்கிய திட்டம்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த செப்டம்பர் 28, 2026 அன்று மதுரை இராசாசி மருத்துவமனையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.
3/6
ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்குப் பலன்
3. ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்குப் பலன்: அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 22.06.2026 அன்று முதல் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கிடும் நடைமுறை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
4/6
பயன்பெறத் தேவையான 6 முக்கிய ஆவணங்கள்
4. பயன்பெறத் தேவையான 6 முக்கிய ஆவணங்கள்: இத்திட்டத்தில் தாய்மார்கள் பயனடைய e-KYC சரிபார்க்கப்பட்ட ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குடியிருப்புச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, தொழிலாளர் நல வாரிய அட்டை அல்லது அஞ்சல் துறை முகவரிச் சான்று ஆகிய 6 தமிழ்நாடு குடியிருப்புச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
5/6
வீட்டிற்கு அனுப்பும் போதே கைகளில் சேரும் மோதிரம்
5. வீட்டிற்கு அனுப்பும் போதே கைகளில் சேரும் மோதிரம்: அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து தாய்மார்கள் குழந்தையுடன் வீடு திரும்பும் போதே, அந்தந்த மருத்துவமனைகளிலேயே உடனடியாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்படுகிறது.
6/6
நிறைந்தது மனம்' நிகழ்ச்சி
6. அரசு மருத்துவமனைகளை நாட ஆட்சியர் அழைப்பு: திருப்பத்தூரில் நடைபெற்ற 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொண்டு இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.