• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் நேரம்! ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன் தகவல்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் நேரம்! ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன் தகவல்!

Written ByYuvashree M
Published: Nov 28, 2026, 12:50 IST|Updated: Nov 28, 2026, 13:05 IST
joinshare
Thiruparankundram Deepam Timing : திருப்பரங்குன்றத்தில், இன்று மாலை எந்த நேரத்திற்கு தீபம் ஏற்றப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு முன்னாள் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் பதிலளித்துள்ளார். இது குறித்த முழு தகவல், இதோ.

Thiruparankundram Deepam Timing : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபதூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு; மலைப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய CRPF வீரர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றத்திற்கு வருகை புரிந்த முன்னாள் நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் தீபம் ஏற்றப்படும் நேரம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

Thiruparankundram Deepam Supreme Court Order1/5

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஆறுபடை வீடுகளில் முதல் படையான சுப்பிரமணியசாமி கோவிலில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவது ஒற்றை அதற்கான பொருட்கள், மண்சட்டி நெய் உள்ளிட்டவை எடுத்து வரப்பட்டுள்ளன. இந்த சமயத்தில், எந்த நேரத்தில் தீபம் ஏற்றப்படும் எனும் கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
Former Chief Justice In Thiruparankundram2/5

திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் பழைய அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவது தொடர்பாக அறநிலை துறை அதிகாரி உடன் கேட்டிருந்தார். அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் பதிலளித்திருக்கிறார்.
Thiruparankundram Deepam Timing3/5

திருப்பரங்குன்றம் தீபம் நேரம் குறிக்கப்பட்டது

மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டர்களுடன் ஆலோசணை நடத்தி, அவர்கள் இந்த நேரத்தை குறித்து கொடுத்த பிறகு, இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. மலை உச்சியில் நடைபெறவுள்ள தீபமேற்றும் நிகழ்வில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பக்தர்கள் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Deepam in 50 Meters from Dharga4/5

தர்காவிற்கு 50 மீட்டர் தொலைவில் தீபம்

திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படை உறுதிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவையும் உச்ச நீதிமன்றம் இடை நீக்கம் செய்துள்ளது.
Thiruparankundram Deepam Issue5/5

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

திருப்பரங்குன்றம் மலை மேல் தர்காவிற்கு செல்லும் வழியில் தான் தீபதூண் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் பக்தர்கள் மலை மேல் பாதி வழியில் காவல் துறையினர் தர்கா செல்லும்பிரிவு பாதையில் பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மலை மேல் பக்தர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது... டிச.11 வரை சிறை - கவனம் பெறும் POSH சட்டம் என்றால் என்ன? Explained

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது... டிச.11 வரை சிறை - கவனம் பெறும் POSH சட்டம் என்றால் என்ன? Explained

2

Explainer: தொகுதி மறுவரையறை மசோதாவின் முக்கிய அம்சமாக PoK!! இந்தியா போடும் மாஸ்டர் பிளான், கடுப்பாகும் பாகிஸ்தான்

3

காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!

4

தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை சீட்? நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தொகுதி மறுவரையறை!

5

கோவையில் ஷாக்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கணித ஆசிரியர் போக்சோவில் கைது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.