• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 9 முதல் தங்க அனுமதியில்லை.. அதிரடி அறிவிப்பு

திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 9 முதல் தங்க அனுமதியில்லை.. அதிரடி அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 06, 2026, 04:59 PM IST|Updated: Nov 06, 2026, 05:18 PM IST
joinshare
Thiruparankundram Murugan Temple: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 9ஆம் தேதி முதல் கோயிலில் தங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thiruparankundram Murugan Temple: நவம்பர் 10ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளதால் நவம்பர் 9ஆம் தேதி இரவு முதல் கோயிலில் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதியில்லை.
 

Thiruparankundram Murugan Temple1/5

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகள் உள்ளன. அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திருப்பரங்குன்றம் இருக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Thiruparankundram Murugan Temple2/5

திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

அதாவது, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 9ஆம் தேதி முதல் முதல் மட்டுமே பக்தர்கள் தங்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thiruparankundram Murugan Temple3/5

கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி, மதுரை மாவட்டம். திருப்பரருன்றம் வட்டம். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பசலிஆண்டு 436க்கான கந்தசஷ்டி திருவிழா 10.112026 முதல் நடைபெற உள்ளது. இத்திருக்கோயில் நலன் கருதியும், பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதியும், எதிர்வரும் 08:112026 தீபாவளிப்பண்டிகை தினத்தன்று பக்தர்கள் இத்திருக்கோயிலில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
Thiruparankundram Murugan Temple4/5

இரவு முதல் இத்திருக்கோயிலில் தங்க அனுமதி இல்லை

மேலும் கந்தசஷ்டி திருவிழா 10:112026 அன்று துவங்க இருப்பதால், நவம்பர் 9ஆம் தேதி இரவு முதல் இத்திருக்கோயிலில் தங்கி விரதமிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thiruparankundram Murugan Temple5/5

மகா கந்த சஷ்டி விழா

2026ஆம் ஆண்டுக்கான மகா கந்த சஷ்டி விழா மற்றும் விரதம் நவம்பர் 10, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளான நவம்பர் 15ஆம் தேதி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனால், பக்தர்கள் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
போலீசாரை மிரட்டி கத்தியால் வெட்ட முயற்சி! போதை இளைஞரின் வெறிச்செயல்..

போலீசாரை மிரட்டி கத்தியால் வெட்ட முயற்சி! போதை இளைஞரின் வெறிச்செயல்..

2

”ஒரு வருஷம் பொறுங்க.. விஜய் அண்ணன் ஆட்டம் தெரியும்".. எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி

3

மூக்குத்தி அம்மன் 2 vs சீன் vs ராமாயணா : தீபாவளி வின்னர் யார்? மக்களுக்கு பிடித்த படம் எது?

4

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகள்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

5

ரூ. 40 கோடி சம்பளம் வேண்டுமாம்.. ஐபிஎல் அணிகளிடம் டிமெண்ட் வைக்கும் வீரர்கள்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.