தமிழை தாண்டி, தென்னிந்திய திரையுலகில் பல்வேறு திரைப்படங்கள் இந்த வாரம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, அவை என்னென்ன படங்கள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்த வாரம் தியேட்டரில் பல்வேறு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில், ஓ.ம், சத்தியவான் சாவித்ரி உள்ளிட்ட திரைப்படங்களும் அடக்கம். அந்த படங்களின் முழு லிஸ்ட்டை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
இந்த வார தியேட்டர் ரிலீஸ்
சினிமா பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இந்த வாரம் தியேட்டரில் பலரும் எதிர்பார்த்த முக்கிய திரைப்படங்கள் வெளியக இருக்கின்றன. அந்த படங்களின் லிஸ்டையும், அப்படத்தின் கதை, நடிக்கு நடிகர்கள் உள்ளிட்ட விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
2/5
ஓ.ம் திரைப்படம்
தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம்தான், ஓ.ம். இந்த படம், கேங்க்ஸ்டர் த்ரில்லர் ட்ராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம், வரும் வெள்ளியன்று அதாவது நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார்.
3/5
சத்யவான் சாவித்ரி
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்த சத்யவான் சாவித்ரி திரைப்படம், திரையரங்குகளில் வரும் நவம்பர் 20ஆம் தேதியன்று வெளிவர இருக்கிறது. இந்த படம், தன் கணவனை காக்க மனைவி படும் போராட்டங்களை மையமக கொண்டு எழுதப்பட்ட படமாக இருக்கிறது. இப்படத்தை பிரவீன் எஸ்.விஜய் என்பவர் இயக்கி இருக்கிறார்.
4/5
அப்பா குட்டி
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம், அப்பா குட்டி. இந்த படத்தை மு.மாறன் இயக்குகிறார். இப்படம், நவம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை பார்க்க பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.
5/5
ஆகாஸம்லோ ஒக்க தாரா
ஆகாஸம்லோ ஒக்க தாரா எனும் தெலுங்கு திரைப்படம், நவம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம், கிராமத்தில் இருந்து வரும் பெண் ஒருவர் விண்வெளி வீரராக மாற துடிக்கும் கனவை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.