நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி சார்பில் திலக் வர்மா விளையாட உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையே மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்துக்கு பும்ரா புறப்பட்டுள்ள நிலையில், ரிஷப் பண்ட் இன்னும் உடற்தகுதிபெறவில்லை.
1/6
இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம்
நியூசிலாந்து நாட்டுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. டி20ஐ தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நவம்பர் 4ஆம் தேதி அன்று 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நடைபெறுகிறது. நவம்பர் 19ஆம் தேதி அன்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
2/6
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ
இதற்கிடையே நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகல் நடைபெறுகின்றன. முதல் போட்டி நிறைவடைந்த நிலையில், 2வது போட்டி நேற்று தொடங்கியது. இரண்டு நாள் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்னும் இரண்டு நாள் ஆட்டம் பாக்கி உள்ளது.
3/6
நியூசிலாந்துக்கு புறப்பட்ட பும்ரா
3வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 7ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்போட்டியில் பும்ரா விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று வழக்கமான பிட்னஸ் சோதனைக்கு பிசிசிஐயின் சிறப்பு மையத்திற்கு வந்த பும்ரா இன்று நியூசிலாந்துக்கு புறப்படுகிறார்.
4/6
ரிஷப் பண்ட் உடற்தகுதி பெறவில்லை
மேலும், இந்தியா ஏ ஸ்குவாடில் இடம்பெற்றுள்ள ரிஷப் பண்ட் இன்னும் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெறவில்லை என்பதால் அவர் இன்னும் நியூசிலாந்து புறப்படவில்லை. ரிஷப் பண்ட் உடன்தான் பும்ராவும் நியூசிலாந்துக்கு செல்ல இருந்தார். ஆனால் தற்போது ரிஷப் பண்ட் செல்லவில்லை.
5/6
திலக் வர்மா விளையாடுவார்
இந்நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரர் திலக் வர்மா இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இந்தியாவில் நடந்த சிவப்பு பந்து தொடரான துலீப் டிராபி தொடரில் திலக் வர்மா ரன்களை குவித்து கவனம் ஈர்த்திருந்தார். எனவே அவருக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக 3வது போட்டியில் விளையாடவைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
6/6
டெஸ்ட் ஸ்குவாடுக்கு வருவாரா திலக்?
திலக் வர்மா டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பெறவில்லை. ஓடிஐ தொடரிலும் கடைசி 2 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார். இதற்கிடையே அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் திலக் வர்மா பங்கேற்பார் என தெரிகிறது. ஒருவேளை ரிஷப் பண்ட் உடற்தகுதி பெறாமல் விலகும்பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்டராக திலக் வர்மா கொண்டுவரப்படலாம். ஏற்கெனவே விக்கெட் கீப்பர் பேட்டராக துருவ் ஜுரேல் ஸ்குவாடில் இருக்கிறார். தேவைப்பட்டால் பேக்-அப் விக்கெட் கீப்பராக குமார் குஷாக்ராவையும் தேர்வு செய்யலாம்.