TN Govt Farmer Loan: விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடன் தமிழக அரசு வழங்குகிறது. ரூ.5 லட்சம் கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Govt Farmer Loan: ரூ.5 லட்சம் கடனை எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1/5
ரூ.5 லட்சம் வரை கடன் தரும் தமிழக அரசு
தமிழக அரசு பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு கடன் வழங்கி வருகிறது. குறைந்த வட்டியில் தொழில் தொடங்க கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு கடன் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க ரு.5 லட்சம் கடன் வழங்க விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2/5
விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடன்
தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின்போது இந்த அறிவிப்பு வெளியடப்பட்டது. இந்த நிலையில், அதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு ரூ.5 லட்சம் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
3/5
ரூ.5,000 கோடி ஊரகத் தொழி கடன் வழங்க இலக்கு
இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு துறை அறிவிப்பின்படி, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5,000 கோடி ஊரகத் தொழி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
4/5
ரூ.5 லட்சம் கடனுக்கு ஆண்டுக்கு 9% வட்டி விகிதம்
ரூ.5 லட்சம் கடனுக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டி விகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கிய நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தும் வசதி உள்ளது. தகுதியானவர்களுக்கு தேவைக்கேற்ப 3 முதல் 6 மாதங்கள் வரை தவணைச் சலுகை காலம் வழங்கப்படும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், விளம்புநிலைத் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
5/5
ரூ.5 லட்சம் கடன் யாரெல்லாம் பெறலாம்?
ரூ.5 லட்சம் கடன் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்ககள் மூலம் மத்திய காலக் கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுட்டுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகள், தங்களது வருவாயை மேம்படுத்திக் கொள்ள இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.