• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /இன்ஸ்டா பிரபலம் நகை திருட்டு வழக்கு! காண்டிராக்டருக்கு போலீஸ் மீண்டும் சம்மன்..அப்டேட் என்ன?

இன்ஸ்டா பிரபலம் நகை திருட்டு வழக்கு! காண்டிராக்டருக்கு போலீஸ் மீண்டும் சம்மன்..அப்டேட் என்ன?

கன்னியாகுமரியில், யூடியூபர் மதுமிதா வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மதுமிதாவே தன்னிடம் நகையை திருடியதாக இன்னொருவர் புகார் கொடுத்தார். இந்த சம்பவத்தின் சமீபத்திய அப்டேட் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Written ByYuvashree M
Published: Oct 18, 2026, 03:43 PM IST|Updated: Oct 18, 2026, 03:50 PM IST
joinshare
இன்ஸ்டா பிரபலம் நகை திருட்டு வழக்கு! காண்டிராக்டருக்கு போலீஸ் மீண்டும் சம்மன்..அப்டேட் என்ன?
Image Credit: YouTuber Madhumitha Case | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அலறிய செல்போன்.. சென்னைக்கு ரெட் அலர்ட்! இந்த 5 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

அலறிய செல்போன்.. சென்னைக்கு ரெட் அலர்ட்! இந்த 5 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

2

ஷமி இல்லை.. இந்திய அணிக்கு திரும்பும் மூத்த வீரர்? கவாஸ்கர் சொன்ன முக்கிய மேட்டர்

3

இன்ஸ்டா பிரபலம் நகை திருட்டு வழக்கு! காண்டிராக்டருக்கு போலீஸ் மீண்டும் சம்மன்..அப்டேட் என்ன?

4

அனிருத்-காவ்யா திருமணத்தை அன்றே கணித்த பெண்! வைரலாகும் வீடியோ..

5

மக்களை சமூக அந்தஸ்தை வைத்து பிரித்து பார்த்த அமைச்சர்..டிடிவி தினகரன் கண்டனம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோர்வில் அருகே தம்பத்துத்க்கோணம் பகுதியைச் சேர்ந்தவர், மதுமிதா. இவருக்கு 28 வயது ஆகிறது.இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் அடிக்கடி ஏராளமான நகைகளை அணிந்தவாறும், பணக்கட்டுகளை கைகளில் வைத்தவாறும் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துத் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இவரது வீட்டில்தான் கடந்த மாதம் சுமார் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

4 பேர் கைது..

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 98 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த காண்டிராக்டர் பேச்சிமுத்து (35) என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு மதுமிதா தன்னிடம் இருந்து 5 பவுன் நகை யை பறித்து சென்றதாக ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி?

இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உத்தமபாண்டியன்குளம் விலக்கு பகுதி என்பதால், இந்த வழக்கு நெல்லை மாவட்டட் ம் பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு மாற்றப்பட்டட் து. இதுபற்றி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் விசாரணை நடத்தினார். அப்போது, முதுகுவலி பிரச்சனைக்காக பிசியோதெரபி சிகிச்சைக்குச் சென்றபோது மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், கடந்த 2022-ம் ஆண்டு நெல்லைக்கு வந்திருந்தபோது
உத்தமபாண்டியன்குளம் விலக்கு பகுதியில் காரில் இருந்தபடி தனக்கு மசாஜ் செய்த மதுமிதா, தனது நகையை பறித்துத் சென்றதாகவும்
பேச்சிமுத்து கூறினார்.

மேலும் படிக்க | லீவ் முடிந்து சென்னை வர... தென் மாவட்ட மக்களுக்கு சிறப்பு ரயில் - முழு அட்டவணை இதோ

சம்மன் அனுப்பிய போலீஸார்..!

இதன் அடிப்படையில் போலீசார் கொள்ளை வழக்குப் பதிவு செய்தனர். முதலில் பேச்சிமுத்துவை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு போலீசார் 2- ர் வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். பேச்சிமுச் த்துத் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு, அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மதுமிதாவுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால், காண்டிராக்டரிடம் யூடியூபர் மதுமிதா 5 பவுன் நகை பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சூடுபிடித்துள்ளது.

சர்ச்சையில் சிக்கி வரும் மதுமிதா..

தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் மதுமிதா தற்போது ஒருவரிடம் இருந்து ஐந்து பவுன் நகையை பறித்த சம்பவம் தற்போது காவல்துறை வட்டாரத்தில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தனது வீட்டிலிருந்து நகை கொள்ளை போனதாக கடந்த வாரம் காவல் நிலையத்தில் புகார் செய்த மதுமிதா தற்போது 5 பவுன் தங்க நகை திருடிய வழக்கிலும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பேசும் பொருளாகியுள்ளது அரைகுறையாக ஆடைகள் அணிந்து youtube மூலமாக பணத்தை சம்பாதிக்கலாம் என மதுமிதா நினைத்தால் ஆனால் தற்போது ஐந்து பவுன் தங்க நகையை திருடிய வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது  அவர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை உள்ளதா அல்லது விசாரணை மேற்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | ரூ.5 லட்சம் வரை கடனுதவி! தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்.. தமிழக அரசு அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime