• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தீபாவளிக்கு முன்பே வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்! நவம்பர் மாத தேதி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தீபாவளிக்கு முன்பே வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்! நவம்பர் மாத தேதி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Written ByUmabarkavi K
Published: Nov 02, 2026, 06:43 PM IST|Updated: Nov 02, 2026, 06:48 PM IST
joinshare
TN Ration Card November Update: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் நவம்பர் 4,5ஆம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியை குறித்து வைத்துக் கொண்டு, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 TN Ration Card November Update:  நவம்பர் 4,5ஆம் தேதிகளில் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது.
 

TN Ration Things Door Delivery1/5

வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்

கடந்த திமுக ஆட்சியில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முன்னாள முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் துவங்கி வைத்தார். 2025, ஆகஸ்ட் 12ஆம் தேதி இத்திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் இல்லத்தில் நேரில் சென்று அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
TN Ration Things Door Delivery2/5

நவம்பர் மாதம் ரேஷன் பொருட்கள் விநியோகம் தேதி அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ரேஷன் பொருட்கள் தகுதியுள்ள பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதம் எந்த தேதியில் இல்லம் தேடி ரேஷன் திட்டத்தில் பொருட்கள் எப்போது விநியோகம் செய்யப்படும் என்பது குறித்து தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Ration Things Door Delivery3/5

தீபாவளிக்கு முன்பே ரேஷன் பொருட்கள் விநியோகம்

தீபாவளி பண்டிகைக்கு முன்பே ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், நவம்பர் 4,5ஆம் தேதிகளி அனைத்து மாவட்டத்திலும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
TN Ration Things Door Delivery4/5

நவம்பர் 4,5ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம்

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், இத்திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 447 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 24,155 குடும்ப அட்டைகளில் ஒரே குடும்ப அட்டையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவரையும் 65 முதல் 70 வயதினை கொண்ட முதியவரும் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
TN Ration Things Door Delivery5/5

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பெற்றுக் கொள்ளலாம்

அதன்படி, நவம்பர் 2026 மாதத்தில் 04.11.2026 மற்றும் 05.11.2026 ஆகிய தேதிகளில் ஒரே குடும்ப அட்டையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவரையும் 65 முதல் 70 வயதினை கொண்ட முதியவரும் மற்றும் மாற்றுத்திறனாளி வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் 04.11.2026 மற்றும் 05.11.2026 ஆகிய நாட்களில் குடிமைப் பொருட்களை அவர்களின் வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
TAGS:
Ration Card

Trending

  • News
  • Photos
  • Videos
புல்லட் ரயில் B28: சென்னைக்கும் வருது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? Explained

புல்லட் ரயில் B28: சென்னைக்கும் வருது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? Explained

2

இதெல்லாம் அடுக்குமா? மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேளை! ஒரே நேரத்தில்..இரண்டு இடத்திலா?

3

பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

4

Zee Enterntainment நிறுவனத்தில் முக்கிய நியமனங்கள் - தலைமை AI அதிகாரியாக துஷார் வோரா நியமனம்

5

வாட்ஸ் அப்பில் PF சேவை.. பேலன்ஸ் செக் செய்வது எப்படி? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.