• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /வாட்ஸ் அப்பில் PF சேவை.. பேலன்ஸ் செக் செய்வது எப்படி? முழு விவரம்

வாட்ஸ் அப்பில் PF சேவை.. பேலன்ஸ் செக் செய்வது எப்படி? முழு விவரம்

PF Balance Whatsapp: இனி வாட்ஸ்அப் மூலமே பிஃஎப் செக் செய்யும் அம்சத்தை EPFO அறிமுகம் செய்துள்ளது. எனவே, வாட்ஸ் அப் மூலம் எப்படி பிஃஎப் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 02, 2026, 05:19 PM IST|Updated: Nov 02, 2026, 06:08 PM IST
joinshare
வாட்ஸ் அப்பில் PF சேவை.. பேலன்ஸ் செக் செய்வது எப்படி? முழு விவரம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

2

Zee Enterntainment நிறுவனத்தில் முக்கிய நியமனங்கள் - தலைமை AI அதிகாரியாக துஷார் வோரா நியமனம்

3

வாட்ஸ் அப்பில் PF சேவை.. பேலன்ஸ் செக் செய்வது எப்படி? முழு விவரம்

4

Explained : ‘முரசு’ புயல் பெயர் காரணம்! ஏன் இந்த பெயர் வந்தது? இதோ முழு விவரம்..

5

பிபிஓ, ஐடி வேலைகளுக்கு ஆப்பு.. தூக்கி சாப்பிடும் AI.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

PF Balance Whatsapp: வேலைக்கும் செல்லும் பலருக்கும் ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பிஎஃப் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதனை தொழிலாளர் வருங்கல வைப்பு நிதி அமைப்பான EPFO கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை தேவைப்படும் எடுத்துக் கொள்ளலாம். பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது, நிறுவனம் முழுமையாக பணத்தை கணக்கில் செலுத்தியுள்ளதா என்பதை பிஎஃப் அலுவலகம், இணையதளத்தில் பார்க்க வேண்டும்.

இனி வாட்ஸ் அப்பில் பிஃஎப் பேலன்ஸ் பார்க்கலாம்

ஆனால், பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க பலரும் சிரமப்படுகிறார்கள். அதாவது, உமாங் செயலி, இணையதளத்தில் தான் பார்க்க முடியும்.  இதில் அவ்வப்போது சர்வர் பிரச்னை போன்ற ஏற்படுவதால் ஊழியர்கள் தங்கள் PF இருப்பைச் சரிபார்ப்பதில் அடிக்கடி சிரமங்களை எதிர்கொண்டனர்.

அதனை எளிதாக்கும் வகையில் தான், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது, EPFO தனது சந்தாதாரர்களுக்கு புதிய வாட்ஸ் அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிஎஃப் கண்ககில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை இனி வாட்ஸ் அப் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

பிஎஃப் மட்டுமில்லாமல், கடைசியாக செய்யப்பட்ட 5 பரிவர்த்தனகைள், பாஸ்புக் விவரங்கள் போன்றவற்றையும் பார்க்க முடியும். இந்த புதிய வசதியை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நவம்பர் 1ஆம் தேதி நேற்று துவங்கி வைத்தார். எனவே, வாட்ஸ் அப்பில் எப்படி பிஎஃப் பணத்தை எப்படி சரிபார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

மேலும் படிக்க:பிபிஓ, ஐடி வேலைகளுக்கு ஆப்பு.. தூக்கி சாப்பிடும் AI.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! Explained

வாட்ஸ்அப் மூலம் என்னென்ன சேவைகளை அணுகலாம்?

புதிய வாட்ஸ்அப் வசதியானது, உறுப்பினர்கள் EPFO ​​அலுவலகத்திற்குச் செல்லாமலோ அல்லது பல ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தாமலோ, வருங்கால வைப்பு நிதி (PF) தொடர்பான பல சேவைகளை அணுக முடியும். அதன்படி,

  • பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு தொகை சரிபார்க்கலாம்.
  • கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் விவரங்களை பார்க்கலாம்
  • பிஎஃப் கணக்கின் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்யலாம்
  • முக்கியமான பிஎஃப் கணக்கு தொடர்பான தகவல்களை அணுகலாம்.

EPFO Services on WhatsApp Launched! 💬 Check your EPF Balance, view your last 5 transactions and download your Passbook with just a WhatsApp message. 📲 Scan the QR Code or say Hi at +91 8796441800. #EPFO #WhatsAppServices https://t.co/AqxDzFJr6E

— EPFO (@officialepfo) November 1, 2026

வாட்ஸ் அப்பில் பிஎஃப் பணத்தை எப்படி பார்க்கலாம்?

  • வாட்ஸ்அப்பில் EPFO ​​சேவைகளைப் பெற, +91 8796441800 என்ற அதிகாரப்பூர்வ எண்ணை உங்கள் தொலைபேசியில் சேமிக்க வேண்டும்.
  • தொடர்ந்து, இந்த எண்ணை HI என்ற செய்தியை அனுப்ப வேண்டும்.
  • அல்லது EPFO க்யூஆர்  குறியீட்டை  ஸ்கேன் செய்வதன் மூலம் பயனரக்ள் நேரடியாக வாட்ஸ் அப் சாட்டிற்கு செல்ல முடியும்.
  • HI என குறிப்பிட்ட பிறகு, மொழியை தேர்வு செய்ய வேண்டும். இந்தி, ஆங்கிலம் மற்றும் பல பிராந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும்.
  • தொடர்ந்து, UAN உடன் இணைக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் உள்ளிட வேண்டும். இதன்பிறகு, உங்களுக்கு தேவையான சேவையை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் PF இருப்பைச் சரிபார்க்க, பரிவர்த்தனை விவரங்களைக் காண அல்லது உங்கள் பாஸ்புக்கைப் பதிவிறக்க தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க: IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?

வாட்ஸ்அப் மூலம் பணத்தைப் பெற முடியுமா?

வாட்ஸ் அப்பில் உள்ள சேவைகள் பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், பிஎஃப் கணக்கில் உள்ள தொகை எடுக்க முடியாது. மேலும், பிஎஃப் பாஸ்புக்கில் உள்ள விவரங்களை திருத்தவும் முடியாது. இதற்காக EPFO  இணையதளம் அல்லது UMANG செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் டவுன்லோடு செய்வது எப்படி?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
EPFO