TN Govt Rice Price Sale: தமிழகத்தில் அரசி விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு ரூ.30க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இதனை எப்படி பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில பார்ப்போம்.
TN Govt Rice Price Sale: மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் கூட்டுறவுத்துறை சார்பில் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1/5
தமிழகத்தில் அரிசி விலை உயர்வு
தமிழகத்தில் அரிசி விலை உச்சத்தில் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்குள் அரிசி விலை கிலோவுக்கு ரூ.100-ஐ எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தற்போது ஒரு கிலா அரிசி விலை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யயப்படுகிறது.
2/5
ஒரு மூட்டை அரிசி ரூ.1800 வரை விற்பனை
பல மாநிலங்களில் நெல் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் தேவை காரணமாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை டீலக்ஸ் பொன்னியின் அரிசி விலை ரூ.1400க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1800 ஆக உயர்ந்துள்ளது. பொன்னி அரசியின் விலை ரூ.1600-லிருந்து ரூ.1,950 ஆகவும், வெள்ளை பொன்னியின் விலை ரூ.1,900-லிருந்து ரூ.2,300 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
3/5
குறைந்த விலையில் அரிசி விற்பனை
அதன்படி, தமிழகத்தில் வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் விலை நிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 'ஏ' தர சன்னரக அரிசியை 31.03.2027 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை சன்னரக அரிசி ஒரு கிலோ ரூபாய் 30க்கு குடும்ப ஒன்றிற்கு 5 கிலோ வீதம் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
4/5
குடும்ப ஒன்றிற்கு 5 கிலோ வரை ரூ.30க்கு அரிசி விற்பனை
எனவே, வெளிச்சந்தையில் அரிசி வாங்குவதற்கு பதில், தமிழக அரசின் கூட்டுறவு பண்டகசாலைகளில் கிலோ ரூ.30க்கு சன்னரக அரிசியை மக்கள் வாங்கிக்கலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, மதுரை மக்கள் கீழ்கண்ட இடங்களில் குறைந்த விலையில் சன்னரக அரிசியை வாங்கிக் கொள்ளலாம்.
5/5
மதுரையில் எங்கெல்லாம் அரிசி வாங்கலாம்?
அதன்படி, மதுரை மாவட்ட தேனி மெயின் முடக்கு சாலை, குலமங்கலம் மெயின் ரோடு, செல்லூர், கெக்காணூராணி திருமங்கலம் தாலுகா, கீழ வெளி வீதி, திருமலை நாயக்கர் மஹால் எதிர்புறம், மதுரை, ரயில்வே காலனி, மதுரை, பசும்பொன் நகர், பைபாஸ் சாலை, மதுரை, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மதுரை ஆகிய இடங்களில் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இந்த முகவரிக்கு சன்னரக அரிசியை பெற்றுக் கொள்ளலாம்.