• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /DA Hike: அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அப்டேட்.. நாளை அகவிலைப்படி அறிவிப்பு? சம்பள உயர்வு எவ்வளவு?

DA Hike: அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அப்டேட்.. நாளை அகவிலைப்படி அறிவிப்பு? சம்பள உயர்வு எவ்வளவு?

DA Hike: அகவிலைப்படி திருத்தத்தை விரைவாக அறிவிக்குமாறு ஊழியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள், 2026 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (Dearness Allowance) திருத்தம் குறித்த விவரங்களை எவ்விதத் தாமதமுமின்றி வெளியிடுமாறு அரசை வலியுறுத்தி வருகின்றன.

Written BySripriya Sambathkumar
Published: Oct 20, 2026, 04:44 PM IST|Updated: Oct 20, 2026, 04:51 PM IST
joinshare
DA Hike: அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அப்டேட்.. நாளை அகவிலைப்படி அறிவிப்பு? சம்பள உயர்வு எவ்வளவு?
Image Credit: Representative / July 2026 DA Hike

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : மெக்காவில் முத்தம் கொடுத்ததால் மரண தண்டனை? காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடுமை!

Explained : மெக்காவில் முத்தம் கொடுத்ததால் மரண தண்டனை? காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடுமை!

2

விஜய் கட்சியில் நடக்கும் ஊழல்? பதவிக்கு ரூ. 10 லட்சம்? வெளியான ஆடியோ!

3

DA Hike: அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அப்டேட்.. நாளை அகவிலைப்படி அறிவிப்பு? சம்பள உயர்வு எவ்வளவு?

4

Explainer: ஏற்றுமதி மூலம் உலகளாவிய பட்டாசுச் சந்தையை குறிவைக்கும் சிவகாசி!!

5

சென்னை டூ ராம்நாடு.. இன்று இரவு முதல் வெளுக்கப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

DA Hike: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்துக்கான எதிர்பார்ப்புடன் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஜூலை முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்புக்காகவும் காத்திருக்கிறார்கள். அக்டோபர் 14 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜூலை 2026-க்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அக்கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான செயல்திறன் சார்ந்த போனஸ் மட்டுமே அறிவிக்கப்பட்டது; அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

தற்போது மத்திய அரசு ஊழியர்கள், அக்டோபர் 21, 2026 அன்று நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தசரா பண்டிகைக்கு மறுநாள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

அக்டோபர் 21 அமைச்சரவைக் கூட்டம்

அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயரும் என்று ஊழியர் சங்கங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன. அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பின் (AIDEF) செயலாளர் சி. ஸ்ரீகுமார், அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தங்கம், கச்சா எண்ணெய் முதல் தலால் ஸ்ட்ரீட் பங்குகள் வரை: AI மூலம் கமாடிட்டி சந்தையை எளிதாக்கும் க்வாலா இன்டெல்

அகில இந்திய புதிய ஓய்வூதியத் திட்ட ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சித் படேல், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ளார். எது எப்படியிருப்பினும், அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை ஊழியர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

அகவிலைப்படி 60%-லிருந்து 63%-ஆக உயரக்கூடும்

தற்போது அரசு ஊழியர்களுக்கு 60% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. சில்லறை பணவீக்க புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்) அரசு அகவிலைப்படியை மாற்றியமைக்கிறது. ஜூலை 2026-க்கான அகவிலைப்படி மாற்றத்திற்காக, ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரையிலான சராசரி சில்லறை பணவீக்க விகிதத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜூன் மாத பணவீக்க புள்ளிவிவரங்களைக் கருத்தில் கொண்டால், 3 சதவீதம் டிஏ உயர்வுக்கு (DA Hike) வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். அவ்வாறு நடந்தால், தற்போதுள்ள 60% அகவிலைப்படி 63%-ஆக உயரும். இருப்பினும், இது ஒரு கணிப்பு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே, அகவிலைப்படியின் சரியான சதவீதம் உறுதி செய்யப்படும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு... எகிறும் எதிர்பார்ப்புகள்: அக்டோபர் 22, 23 8வது ஊதியக் குழுவின் முக்கிய கூட்டம்

ஊழியர் சங்கங்களின் கோரிக்கை

அகவிலைப்படி திருத்தத்தை விரைவாக அறிவிக்குமாறு ஊழியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள், 2026 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (Dearness Allowance) திருத்தம் குறித்த விவரங்களை எவ்விதத் தாமதமுமின்றி வெளியிடுமாறு அரசை வலியுறுத்தி வருகின்றன.

அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு (All India Defence Employees Federation), அக்டோபர் 10, 2026 அன்று அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்த கவலைகளை எடுத்துரைத்து, அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி அறிவிக்குமாறு கோரியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான கட்டம்

அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை அரசு 3 சதவீத உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயரக்கூடும். இருப்பினும், இறுதி முடிவைப் பொறுத்தவரை, அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்திருக்க வேண்டும்.

சம்பள உயர்வு எவ்வளவு?

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால்  ரூ.30,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியருக்கு ஆண்டு நிதி நன்மை எவ்வளவு இருக்கும் என காணலாம்.

கணக்கீடு

அம்சம்விவரம்
ஊழியரின் அடிப்படைச் சம்பளம்ரூ.30,000
தற்போதைய 60% விகிதத்தின்படி, மாத அகவிலைப்படிரூ.18,000
63% அகவிலைப்படியில். அகவிலைப்படி தொகைரூ.18,900
மாத உயர்வுரூ.900
ஆண்டு உயர்வுரூ.10,800

 மேலும் படிக்க | ஜனவரி மாத திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு! ஸ்ரீவாரி தேவஸ்தானம் தகவல்..எப்படி புக் செய்வது?

Add Zee News as a Preferred Source
TAGS:
Dearness Allowance