Aavin Employees Diwali Bonus: ஆவின் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. 3,002 பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Aavin Employees Diwali Bonus: மாநில இணையப் பணியாளர்கள் 1,106 பேர், மாவட்ட ஒன்றியப் பணியாளர்களுக்கு 1,896 பேர் என மொத்தம் 3,002 பணியாளர்கள் போனஸ் பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
ஆவின் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்
தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கும், போக்குவரத்து துறை, கூட்டுறவுத் துறை, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், தற்போது ஆவின் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
2/5
ஆவின் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் 29 மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 3,002 பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும 11.67 சதவீதம் கருணைத் தொகை உட்பட மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,002 பணியாளர்கள் தீபாவளி போனஸ் பெற தகுதியானர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/5
ஆவின் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்க்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
மாநில இணையப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.1.56 கோடியும், மாவட்ட ஒன்றியப் பணியாளர்கள் 1,896 பேருக்கு போனஸ் வழங்க ரூ.2.93 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வழங்கினார்.
4/5
3,002 பணியாளர்களுக்கு போனஸ் பெற தகுதியானவர்கள்
இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பிரிவில் பணியாற்றும் 791 நபர்கள், D பிரிவில் பணியாற்றும் 102 நபர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 213 நபர்கள் என 1106 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.1.56 கோடி மதிப்பிலும் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் C பிரிவில் பணியாற்றும் 991 நபர்கள் D பிரிவில் பணியாற்றும் 901 நபர்கள் ஒப்பந்தப் பணியாளர்கள் 4 நபர்கள் என 1896 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலும் மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்கப்பட்டது.
5/5
மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்கினார்
தொடர்ந்து, C பிரிவில் பணியாற்றும் 1782 நபர்கள், D பிரிவில் பணியாற்றும் 1003 நபர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 217 நபர்கள் என 3002 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.4.49 கோடி மதிப்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை பெற்று பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவின் பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.