• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. அக்டோபர் மாத தேதி அறிவிப்பு.. ரெடியா இருங்க மக்களே!

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. அக்டோபர் மாத தேதி அறிவிப்பு.. ரெடியா இருங்க மக்களே!

Written ByUmabarkavi K
Published: Oct 03, 2026, 08:34 AM IST|Updated: Oct 03, 2026, 08:41 AM IST
joinshare
Ration Card October Update: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் அக்டோபர் 3,5ஆம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Ration Card October Update: எனவே, இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
 

TN Ration Card1/5

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

கடந்த திமுக ஆட்சியில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேதி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. தாயுமானவர் திட்டம் என்ற பெயரில் மாதந்தோறும் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்றே வழங்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 27.55 இலட்சம் பயனாளிகள் உள்ளனர்.
TN Ration Card2/5

அக்டோபர் மாத அப்டேட் வெளியானது

இந்த நிலையில், அக்டோபர் மாத அப்டேட் வெளியாகி உள்ளது. வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
TN Ration Card3/5

அக்டோபர் 3 மற்றும் 5 ஆகிய நாட்களில் ரேஷன் பொருட்கள் விநியோகம்

இந்நிலையில், அக்டோபர் மாதத்தின் 3 மற்றும் 5 ஆகிய நாட்களில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் இரருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
TN Ration Card4/5

19 மண்டலங்களில் இருந்து ரேஷன் பொருட்கள் விநியோகம்

அக்டோபர் மாதத்தின் 3 மற்றும் 5 ஆகிய நாட்களில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Ration Card5/5

தவறாமல் பயன்படுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தல்

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு என அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
TAGS:
Ration Card

Trending

  • News
  • Photos
  • Videos
மின்தடை பிரச்னையா? உடனடி தீர்வுக்கு வாட்ஸ் அப்பில் சூப்பர் வசதி.. புகார் எண் அறிமுகம்

மின்தடை பிரச்னையா? உடனடி தீர்வுக்கு வாட்ஸ் அப்பில் சூப்பர் வசதி.. புகார் எண் அறிமுகம்

2

இந்திய விமானியை தாக்கிய துணை விமானி யார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்கள்

3

பல்டி பாமா... சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் பேச்சு - அமைச்சர்கள் கண்டனம்

4

ரோகித்தின் அதிரடி சதம்.. இப்போது வருத்தப்படும் அகர்கர்! போட்டு உடைத்த சடகோபன் ரமேஷ்!

5

ரிங்கில் மிரட்டிய இந்தியர்.. சுபாஷ் சந்திரா அறக்கட்டளை மாணவர் அங்குஷ் பங்கால் தங்கம் வென்று அசத்தல்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.