• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தமிழக அரசின் ரூ.5,000 மானியம்.. யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்

தமிழக அரசின் ரூ.5,000 மானியம்.. யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்

Written ByUmabarkavi K
Published: Sep 30, 2026, 15:40 IST|Updated: Sep 30, 2026, 15:54 IST
joinshare
TN Govt Announcement: தமிழகத்தைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொள்ளும் பௌத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 TN Govt Announcement:  பௌத்தர்களுக்கு மானியமாக ரூ.5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

TN Govt1/5

பௌத்தர்களுக்கு தமிழக அரசின் மானியம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ .5,000 வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது.
TN Govt2/5

ரூ.5000 மானியம் தரும் தமிழக அரசு

இத்திட்டத்தின்கீழ் 2026-ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
TN Govt3/5

தமிழக அரசின் ரூ.5000 மானியம் பெறுவது எப்படி?

மேலும், இப்படிவங்களை www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
TN Govt4/5

நவம்பர் 15ஆம் தேதிக்குள் மானியம் பெற விண்ணப்பிக்க வேண்டும்

பௌத்தர்கள் ரூ.5,000 மானியம் வருகின்ற 15.11.2026-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மட்டுமின்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Govt5/5

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

எனவே, பௌத்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால், மாவட்ட அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் தெரிந்து கொள்ளுங்கள்.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.